இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது?

சென்னை: ஜாலி இயக்குனர் எடுக்கும் படம் ஒன்றின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது. ஆனால் முதல் நாள் ஷூட்டிங்கிற்கே ஹீரோ வராதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் அந்த ஜாலி இயக்குனர். இவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஜாலியாக இருக்கும்.

அதே சமயம் இவரின் ஷூட்டிங் ஸ்பாட் அதை விட ஜாலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் நிம்மதியாக, சரக்கடித்து, என்ஜாய் செய்து கொண்டே படம் எடுப்பதுதான் இவர்களின் வழக்கம்.

என்ன வழக்கம்

என்ன வழக்கம்

இந்த நிலையில் இந்த ஜாலி இயக்குனர் தற்போது விரல் நடிகருடன் படம் கமிட் ஆகியுள்ளார். முதலில் இருந்தே இந்த படத்தில் நிறைய பிரச்சனைகள். முதலில் இந்த படம் கமிட் ஆன பின் ஷூட்டிங் தொடங்காமலேயே இருந்தது. ஹீரோ படத்தின் ஷூட்டிங்கிற்கு வராமல் காலம் தாழ்த்தி வந்தார். நிறைய பிரச்சனை வந்தது.ஒருநாள் கூட ஷூட்டிங் நடக்கவில்லை.

வெளியே சென்றார்

வெளியே சென்றார்

இதனால் படக்குழுவிற்கும் நடிகருக்கும் பெரிய சண்டை வந்தது. இதையடுத்து படத்தில் இருந்து ஹீரோ வெளியேற்றப்பட்டார். அதன்பின் படத்தை மொத்தமாக கைவிடுவதாக பேச்சுக்கள் வந்தது. ஆனால் போக போக, இந்த படம் தொடர்பாக, நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்தது. இறுதியில், படம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஹீரோவும் சமாதானம் ஆகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் படத்தின் ஷூட்டிங் துவங்கும் முன் ஹீரோ மீண்டும் கோவில் குளம் என்று சுற்றுத் தொடங்கினார். பின் வெளிநாடு சென்று உடலைத்தான் குறைத்தார். தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றினார். இவ்வளவும் செய்தவர் படத்தின் ஷூட்டிங்கிற்கு மட்டும் வரவில்லை. இதனால் 4 மாதமாக படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் என்ற விவரங்கள் மட்டும் அவ்வப்போது வெளியான வண்ணம் இருந்தது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. ஆனால் இன்று ஷூட்டிங் அதிகாலை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட பின்பும் கூட , ஹீரோ படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்கிறார்கள். படக்குழு நிறைய முறை போன் செய்தும் கூட ஹீரோ வரவில்லையாம். போனை கூட சில சமயம் எடுக்கவில்லை என்கிறார்கள். இதனால் படக்குழு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளது.

படம் எப்படி

படம் எப்படி

இவரை வைத்து படம் எடுப்பதற்கு எடுக்காமலே இருக்கலாம் என்று படக்குழு புலம்பி வருகிறதாம். இதனால் முழுதாக படம் ஷூட்டிங் நடக்குமா என்பதே தற்போது சந்தேகம் ஆகியுள்ளது. ஒழுங்காக படம் வெளியாகுமா ஆகாதா என்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோ மட்டுமின்றி வேறு சில பெரிய நடிகர்களும் நடிகர்கள். அவர்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X