சினிமா நடிகைகளுடன் சில்மிஷம்.. மனைவியிடம் மாட்டிய "ஹீரோ" கணவர்.. பறக்க போகும் டைவர்ஸ்?
சென்னை: பிரபல சினிமா நடிகர் ஒருவரை அவரின் குணாதிசயம் காரணமாக அவரின் மனைவியே பிரியும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.வீட்டில் இருக்கும் பெரியவர்களால் தற்போது தற்காலிகமாக அந்த முடிவு தள்ளிப்போய் இருக்கிறதாம். இருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக்கொள்பது இல்லை என்றே கூறப்படுகிறது.
அந்த ஹீரோ தற்போது தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் கூட அவர் ஹிட் படம் ஒன்றை கொடுத்தார். ஆனால் அவர் அடிக்கடி ஹிட் படங்களை எல்லாம் கொடுப்பது இல்லை.
அவர் சினிமாவிலேயே வேறு துறையை சேர்ந்தவர், இந்த நிலையில் அதே துறையை சேர்ந்த பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா செய்து சில காலம் நன்றாக இருந்தவர், அதன்பின் பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கினார்.

தொடக்கத்தில் நல்ல படங்களில் நடித்தவர் போக போக பெண்களை மோசமாக காட்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். முக்கியமாக பெண்களை கவர்ச்சியாக காட்டும் அடல்ட் படங்கள்,அல்லது பெண்களை மோசமாக சித்தரிக்கும் படங்களில் நடிக்க தொடங்கினார்.
இதன் காரணமாக அந்த நடிகர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரின் மனைவியே இதை தொடக்க காலத்தில் கண்டித்து இருக்கிறார். ஆனால் இது எல்லாம் சினிமா அப்படித்தான் இருக்கும் என்று கூறி இவர் சமாளித்து இருக்கிறாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் சினிமாவில் வந்த நடிகை ஒருவருடன் இவர் தீவிர காதலில் இருந்துள்ளார்.
இதனால் அந்த நடிகைக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகளையும் வழங்கி வந்துள்ளார். இந்த விஷயம் தற்போது அந்த மனைவிக்கு தெரிய வந்துள்ளது. கவர்ச்சியான படங்களில் நடித்தது மட்டுமின்றி இது வேறயா என்று அந்த மனைவி கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறாராம். இதனால் தனது கணவரை பிரியும் முடிவையும் எடுத்து விட்டாராம். வீட்டில் இருக்கும் பெரியவர்களால் தற்போது தற்காலிகமாக அந்த முடிவு தள்ளிப்போய் இருக்கிறதாம். இருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக்கொள்பது இல்லை என்றே கூறப்படுகிறது.
கோலிவுட் உலகை இந்த டைவர்ஸ் செய்தி அதிர வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











