15 வயது மகளை பலிகடாவாக்கிய அப்பா.. இரவோடு இரவாக சினிமாவை விட்டு ஓடிய நடிகை!
சென்னை: சினிமா என்றாலே அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதுதான் என்பது ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல நடிகை, படப்பிடிப்பின் போது அனுபவித்த பாலியல் சீண்டல்கள் குறித்து இப்போது வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர். அந்த வகையில் வளர்ந்து வந்த அந்த அம்சமான நடிகை தெலுங்கு நடிகர் ஒருவரின் தொல்லையால் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
சிறுவயதில் இருந்தே வசதியாக வாழ்ந்தவர் தான், அந்த அம்சமான நடிகை. இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எந்த ஆசையும். ஆனால், அம்சமான நடிகையின் அம்மா, அப்பாவிற்கு தனது மகளை சினிமாவில் எப்படியாவது நடிகையாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மகள் 11வது படித்துக்கொண்டு இருக்கும் போதே,படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மகளை அழைத்துக்கொண்டு சினிமா கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி இருக்கிறார் அம்சமான நடிகையின் அப்பா.

பலிகாடான மகள்: பல சினிமா நிறுவனத்திற்கு ஏறி இறங்கிய பிறகு அந்த அம்சமான நடிகைக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கதாநாயகி ரோல் இல்லை கவர்ச்சி ரோல் தான், இருந்தாலும் அதற்கு ஒகே சொல்லி அந்த படத்தில் இடுப்பை காட்டி நடித்தார். அந்த படம் சுமாராக ஓடியது, இதையடுத்து ஒரு சில படத்தில் நடித்த அந்த நடிகை அதன்பின் படவாய்ப்பு வராததால், மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்த அந்த அப்பா பெரும் கவலைஅடைந்தார்.
காமெடி நடிகரை அனுசரித்தார்: இந்த சூழ்நிலையில், சினிமா தரகர் ஒருவர் பாலிவுட் போனால், செட்டிலாகிவிடலாம் என்று சொல்ல மொத்த குடும்பமும் பாலிவுட்டில் தவம் கிடைத்தும் படவாய்ப்பு கிடைக்கவில்லை மாறாக தயாரிப்பாளர், இயக்குநருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ததுதான், மிச்சம் என்று புரிந்து கொண்ட அந்த அம்சமான நடிகை பாலிவுட்டை, தலைமுழுகிவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து படவாய்ப்பு தேடி அலைந்தார். அந்த நேரத்தில் தான் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்த காமெடி நடிகர் ஒருவரை அனுசரித்து, அவருடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.
சினிமாவைவிட்டு ஓடிய நடிகை: இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடித்த அந்த அம்சமான நடிகை தான், தெலுங்கு சினிமா ஒன்றின் படப்பிடிப்பின் போது, தெலுங்கு நடிகர் ஒருவர் குடித்துவிட்டு வந்த கதவை தட்டினார் தொல்லை கொடுத்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் தன்னை காப்பாற்றி வெளியில் அனுப்பி வைத்ததாகவும், இதனால்,இரவோடு இரவாக சினிமாவை விட்டு ஓடியதாக அந்த நடிகை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











