அரசியல் பிரமுகர் கொடுத்த அன்பு பரிசு.. சொகுசா வாழ்ந்த நடிகை.. எல்லாமே கை மீறி போச்சு!
சென்னை: அரசியல் பிரமுகர் கொடுத்த அன்பு பரிசால் இத்தனை நாட்கள் சொகுசாக வாழ்ந்து வந்த நடிகை, அடுத்தடுத்து வரும் சிக்கலால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அந்த நடிகை பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு குத்து விளக்கு போல இருக்கும் அந்த நடிகைக்கு பிளஸ் அவருடைய அழகான கண் தான்.
கிராமத்து கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த இவர், திரைப்படத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு மிகவும் பவ்யமாகத்தான் நடிப்பார்.

கசந்த திருமணம்: தொடர்ந்து படங்களில் நடித்து வந்த கண்ணழகி நடிகை திடீரென படங்கள் இல்லாமல் போனதால், தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனால், கணவர் போட்ட கண்டிஷனால் டென்ஷனான கண்ணழகி நடிகை, ஒரு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாமல் சென்னை ஓடி வந்தார்.
படவாய்ப்பு இல்ல: சினிமாவில் விட்ட இடத்தைப் பிடித்துவிடலாம் என மிகவும் போராடிய நடிகைக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இறங்கிப் போய் வாய்ப்பு கேட்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிட்டதால் நோ சொல்லிவிட, என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி உள்ளார்.
அன்பின் சின்னம்: இந்த நேரத்தில் தான் அரசியல் பிரமுகர் ஒருவரின் அறிமுகம் கிடைக்க, இதை சாதகமாக்கிக் கொண்ட கண்ணழகி நடிகை, அவரிடம் அன்போடு பழகி அவரின் பாசத்திற்கு உரியவராக மாறினார். கண்ணழகி அன்பால் மனம் மகிழ்ந்து போன அந்த அரசியல் பிரமுகர், அன்பின் சின்னமாக பண்ணை வீடு ஒன்றை அன்பு பரிசாக கொடுத்திருந்தார்.
நேரம் சரியில்லை: அந்த பண்ணை வீட்டில் இத்தனை நாட்கள் ராணி போல வாழ்ந்து வந்த நடிகைக்கு பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது அரசியல் பிரமுகருக்கு கொஞ்ச நாளாக நேரம் சரியில்லாததால், அவர் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வருகிறார். அவர் சிக்கலில் சிக்கிக் கொண்டால் பண்ணை வீடு கைவிட்டு பறிபோய்விடுமே என்ற பயத்தில், வீட்டை விற்க பிளான்போட்டு காய் நகர்த்தி உள்ளார்.
இடியாப்ப சிக்கல்: ஆனால், நடிகை போட்ட பிளான் பிளாப்பாகி, அரசியல் பிரமுகரிடம் வாங்கி கட்டிக்கொண்டார். தற்போது, இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்ட கண்ணழகி நடிகை, எல்லாமே கை மீறி போச்சு என தலையில் கை வைத்துக்கொண்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











