சர்ச்சையில் உச்ச நடிகர்.. படத்தை நிறுத்த சொன்ன அரசியல் கட்சி.. தயாரிப்பு தரப்பு அதிரடி முடிவு!
சென்னை: உச்ச நடிகர் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவர் நடிக்கும் படத்தை டிராப் செய்யுமாறு முக்கிய கட்சியிடம் இருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அவர் தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உச்ச நடிகர் கொளுத்தி போட்ட ஒரு விஷயம் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிகிறது.
இதனால் உச்ச நடிகருக்கு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நடிகர் அதற்கெல்லாம் அசராமல் இருந்து வருகிறார்.

பெரும்புள்ளிகள்
போதா குறைக்கு சமீபத்தில் அவர் அளித்த பிரஸ் மீட் எரியும் நெருப்பில் லிட்டர் லிட்டராக பெட்ரோலை ஊற்றியிருக்கிறது. இந்நிலையில் உச்ச நடிகரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுனத்திடம் முக்கிய கட்சியை சேர்ந்த பெரும்புள்ளிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம்.

பேசிட்டு போங்க
படத்தை நிறுத்தியே ஆகவேண்டும் என விடாப்பிடியாக அந்த புள்ளிகள், தயாரிப்பு நிறுவனத்திடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ, என்ன பேச வேண்டுமோ பேசிவிட்டு போங்கள்.

பிசினஸ் வேறு கொள்கை வேறு
படத்தையெல்லாம் நிறுத்த முடியாது என பொட்டில் அடித்தாற் போல் சொன்னதாக கோடப்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. அதோடு பிசினஸ் வேறு, கொள்கை வேறு இதில் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலிவுட்டில் பேச்சு
இதனால் சூடான பெரும்புள்ளிகள் எப்படியோ போங்க.. என்று கூறி இடத்தை காலி செய்துவிட்டார்களாம். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராவிட்டாலும் இப்போது இதுதான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளதாம்.

தூக்கி எரிஞ்சுடுவீங்களா?
இந்த வயதிலும் உலகம் முழுக்க ரசிகர்களை வைத்துக்கொண்டு வசூல் மன்னனாக இருக்கும் நடிகரை எப்படி அவ்வளவு சீக்கிரம் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் என்றும் கேட்கிறார்களாம் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











