»   »  வீட்டில் 10 நாட்கள் தங்க சொன்ன பெரிய பாஸ்: தெறித்து ஓடிய இளம் ஹீரோ

வீட்டில் 10 நாட்கள் தங்க சொன்ன பெரிய பாஸ்: தெறித்து ஓடிய இளம் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய பாஸ் வீட்டில் 10 நாட்கள் தங்கச் சொன்னதை கேட்டு இளம் ஹீரோ ஒருவர் தெறித்து ஓடிவிட்டாராம்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அந்த நடிகரின் புதுப்பட டீஸர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. டீஸர் அருமை அண்ணா படத்தை எதிர்பார்க்கிறோம் என்று ஆளாளுக்கு கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பெரிய பாஸ் ஏற்பாட்டாளர்கள் ஹீரோவை அணுகி எங்க வீட்டுப் பக்கம் வாங்களேன் என்று அழைத்துள்ளனர். சரி படத்திற்கு விளம்பரம் தேடியது போன்று இருக்கும் என்று நினைத்து அவரும் ஓகே சொல்லியுள்ளார்.

உடனே பெரிய பாஸ்காரர்களோ சார், வந்தால் மட்டும் போதாது ஒரு 10 நாட்கள் வீட்டில் தங்கிவிட்டு போனீங்க என்றால் நன்றாக இருக்கும் என்றார்களாம்.

என்னது, அந்த வீட்டில் 10 நாட்கள் இருக்க வேண்டுமா என்று ஹீரோ தெறித்து ஓடிவிட்டாராம்.

English summary
A young hero doesn't want to be part of the TV relaity show that has become popular in Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil