ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்!

சின்னத்திரையில் குடும்பப்பாங்காக நடித்து வந்த நடிகை ஒருவர், வெள்ளித்திரைக்கு தாவியதும் கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறார்.

Recommended Video

#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்!-வீடியோ

சென்னை: இதுவரை குடும்பப் பாங்காக நடித்து வந்த நடிகை ஒருவர், கவர்ச்சிக்கு தயார் என பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இந்த நடிகை படிப்பை முடித்துவிட்டு றெக்கக் கட்டி பறந்து கொண்டிருந்தார். பிறகு மாடலிங்கில் ஆர்வம் வர, அதில் நுழைந்து ஒரு கை பார்த்தார்.

அப்போது தான் நடிகைக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர், சீரியல் ராணியாக கொடிக்கட்டி பறந்தார்.

இல்லதரசிகளின் ஆதர்ச நாயகி

இல்லதரசிகளின் ஆதர்ச நாயகி

முதல் சீரியலில் இருந்து கடைசி சீரியல் வரை அனைத்துமே சூப்பர் ஹிட் தான். அதுவும் நடிகையின் குடும்பப் பாங்கான முகம், இல்லதரசிகளின் ஆதர்ச நாயகியாக அவரை உயர்த்தியது. தங்கள் மகளாகவே நடிகையை பார்க்க ஆரம்பித்தனர் தாய்மார்கள்.

சினிமாவில் நடிக்கிறார்

சினிமாவில் நடிக்கிறார்

ஆனால் நடிகை சட்டென ரூட்டை மாற்றி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிவிட்டார். இப்போது அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவரோ இரண்டு படங்களை மட்டுமே ஓகே செய்திருக்கிறார்.

கவர்ச்சிக்கு ரெடி

கவர்ச்சிக்கு ரெடி

சினிமாவிலும் ஹோம்லியாகவே இருப்பது கடினம் என உணர்ந்த நடிகை, கவர்ச்சி ரூட்டுக்கு மாற முடிவெடுத்திருக்கிறார். அதை மறைமுகமாக மற்றவர்களுக்கு தெரியவும் படுத்திவிட்டார்.

கவர்ச்சி உடை

கவர்ச்சி உடை

வழக்கமாக உடல் முழுவதும் மறைக்கும்படியாக தான் பொது நிகழ்ச்சிகளுக்கு ஆடை அணிந்து வருவார் நடிகை. ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை, மெல்லிய உடையில் கவர்ச்சியாக வந்திருந்திருந்தார்.

முறைமுகமாக உணர்த்தினார்

முறைமுகமாக உணர்த்தினார்

அங்கிருந்தவர்கள் இதை பார்த்து, தான் கவர்ச்சி உடை அணிய தயங்க மாட்டேன் என்பதை உணர்த்த தான் நடிகை இவ்வாறு உடை அணிந்து வந்ததாக கிசுகிசுத்தார்கள். எது எப்படியே பெயரை கெடுத்துகொள்ளாமல், வெள்ளித்திரையிலும் மின்னினால் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் தான்.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

பொதுவாக வெள்ளித்திரைக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் தான் சின்னத்திரைக்கு வருவார்கள். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்த நடிகைகள் மிகவும் குறைவு தான். ஆனால் இவர் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நலம் விரும்பிகள் கவலை

நலம் விரும்பிகள் கவலை

இந்த சூழலில் நடிகையின் முடிவு சரியானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒழுங்காக தனக்கு வரும் விஷயத்தை மட்டும் முயற்சி செய்தால் சினிமாவில் தப்பித்து விடலாம். ஆனால் இப்படி கவர்ச்சி ரூட்டுக்கு மாறினால், நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டு, ஒன்றிரண்டு படங்களுடன் காணாமல் போய்விடுவார் என அவரது நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X