அண்ணன் மனைவியுடன் கசமுசா.. அந்த நடிகர் எல்லை மீறி போய்ட்டாராம்.. அண்ணன்தான் பாவம்

By Staff

சென்னை: சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த அவர் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார். முக்கியமாக பெண்கள் விஷயத்தில் படு வீக் என்று கோலிவுட்டே அவருக்கு முத்திரை குத்தியிருக்கிறது. ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் துளிக்கூட கவலைப்படுபவராக தெரியவில்லை. இந்நிலையில் தனது வீட்டில் இருக்கும் அண்ணியுடனேயே அவருக்கு கசமுசா உறவு இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு பறவை ஒன்று பறந்துகொண்டிருக்கிறது.

சினிமாவில் ஏகப்பட்ட கனவுகளோடு நுழைந்தவர் அவர். வீட்டில் இருப்பவர்கள் சினிமாவில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே தனது வீட்டில் இருப்பவர்கள் வாங்காத பெயரையும், புகழையும் தான் அடைந்தே தீர வேண்டும் என்று முதல் படத்திலிருந்தே வெறித்தனமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக வெற்றி, தோல்வி என இரண்டையும் மாறி மாறி பார்த்துவருகிறார்.

நல்ல நடிகர்: அழகு என்பதை தாண்டி திறமையான நடிகர், சினிமாவில் பிற துறைகளிலும் வல்லவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். கடந்த பல படங்கள் அவருக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும்தான் கொடுத்திருக்கின்றன. ஆனாலும் அவருக்கான மார்க்கெட் கொஞ்சம்கூட குறையவில்லை. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவருக்கென கோலிவுட்டில் இருக்கும் தனி மவுசை.

A Kollywood actor is Gossiped to be having an inappropriate relationship with his brother s wife

பெண்கள் விஷயத்தில் வீக்: நல்ல நடிகர் என்று நல்ல பெயரை அவர் பெற்றிருந்தாலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்தான். வீக் என்ட் ஆனால் பார்ட்டி செய்து கூத்து அடிக்கும் அவர்; வாரம் முழுவதும் மாதுக்களை தனது வீட்டுக்கோ அல்லது ஹோட்டல் அறைகளுக்கோ வரவழைத்து அவர்களுடன் இருப்பது வழக்கமாம். அப்படி வரும் பெண்களுக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்போ இல்லை வேறு வழியிலோ கூலியை கொடுத்துவிடுவாராம்.

வெளியான விஷயம்: தொடர்ந்து இப்படி அவர் செய்துகொண்டே இருந்த சூழலில்தான் அவருக்கு விருந்து படைக்க வந்த பெண் வீதிவரை வந்து நடிகரின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டார். அந்தப் பெண் அப்படி செய்ததிலிருந்து நடிகர் அழைத்தால் மாதுக்கள் வருவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள ஆரம்பித்து ஒருகட்டத்தில் வரவே மறுத்துவிட்டார்களாம். ஆனால் ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பதற்கேற்ப என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு முடிவை எடுத்தாராம்.

அண்ணன் மனைவியுடன் கசமுசா: அதாவது வீட்டில் இருக்கும் அண்ணன் மனைவி மீது இவருக்கு ஆசை பிறந்துவிட்டதாம். எப்படி எப்படியோ வலையை வீசி பார்த்த நடிகரிடம் சிக்காமல் அண்ணி தப்பித்துக்கொண்டிருந்தாராம். ஒருகட்டத்தில் தனது கணவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியே சென்றுவிட கணவரின் சகோதரர் விரித்த வலையில் வசமாக சிக்கிக்கொண்டாராம் அம்மணி.

இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்த நடிகர் தனது அண்ணிக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் செய்துகொடுத்துக்கொண்டிருக்கிறாராம். தனது அண்ணன் வந்துவிட்டால் பவ்யமாக நடந்துகொள்ளும் சகோதரர் தற்போது அண்ணனுக்கு ஏதோ ஒரு வேலை கொடுத்து வெளியூர் செல்ல வைப்பதிலேயே குறியாகவும் இருக்கிறார். இது தெரியாத அந்த சகோதரரோ பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டு சென்றுவிட இங்கே அண்ணியும், நடிகரும் வீட்டில் இல்லாத கூத்துக்களை எல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X