மண்டியிடுவாரா மாஸ் நடிகர்?.. மொத்தமாக சிதைக்க திட்டம்.. கூட இருந்தவங்கள நம்பியதெல்லாம் வேஸ்ட்?
சென்னை: தன்னுடன் திறமையானவர்களை சேர்த்துக் கொண்டு சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம். எந்தவொரு பிரச்னை வந்தாலும் அவர்கள் அதை முன்கூட்டியே கணித்து ஐடியா கொடுப்பார்கள் என கோடிக்கணக்கில் செலவு செய்ததெல்லாம் சுத்த வேஸ்ட்டா என உச்சகட்ட டென்ஷனில் மாஸ் நடிகர் இருப்பதாக கிசுகிசுக்கள் கசிந்துள்ளன.
ஒரு காரியத்தை செய்தே தீர வேண்டும் என்கிற வெறி தனக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதையும், தன்னுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஐடியா இருப்பதால் தான் தொடர்ந்து அடிமேல் அடி விழுகிறது என அப்செட் ஆகிவிட்டாராம்.

எந்த தவறும் தனது தரப்பில் இல்லை என்றாலும், எதிரிகள் அடிக்கும் அடியை தடுக்கவோ, சரி செய்யவோ கூட நானே தான் களத்தில் இறங்க வேண்டியதாக இருக்கிறதே என நினைத்து கூட இருப்பவர்களிடம் கோபத்தைக் காட்டி விட்டார் என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
மண்டியிடுவாரா மாஸ் நடிகர்: எப்படியாவது நடிகரை முடக்கி விட வேண்டும் என்றும் அவர் பெரிதாக சம்பாதித்து அவரது இலக்கை அடைய விடாமலும், அவரது புதிய பாதையை நோக்கி நகரவிடாமல் பழைய பாதையிலேயே ஏகப்பட்ட கண்ணாடி துண்டுகளை போட்டு மாஸ் நடிகரை மண்டியிட வைக்க வேண்டும் என்றும் அவர் பேசிய பேச்சுக்கெல்லாம் அவரை மொத்தமாக முடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எதிரிகள் செயல்பட்டு வருவதாக அருகே இருப்பவர்கள் சொன்னாலும், அதை தடுக்க எந்தவொரு வழியும் அங்கே சென்று மாட்டிக் கொள்ளாமல் இருக்க எந்தவொரு ஐடியாவும் யாருமே தரவில்லை என்பது தான் மாஸ் நடிகரின் மன வேதனைக்கு காரணம் என்கின்றனர்.

நானே பார்த்துக்கிறேன்: இவ்ளோ தூரம் இறங்கிட்டேன், இனிமேல், எது நடந்தாலும் பார்த்துக்கிறேன், நானே எல்லாத்தையும் செட்டில் பண்றேன் என்கிற வெறியுடன் மாஸ் நடிகரே மற்றவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும் ஒப்படைக்காமல் களத்தில் இறங்கியுள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. புகழ் வெளிச்சத்தை தாண்டி உண்மையான சிக்கல்கள் என்ன? சவால்கள் என்ன? சோதனை எப்படி எல்லாம் வரும் என்பதை பார்த்து ஷாக் ஆனாலும், அதில் கிடைத்த பாடங்களை படித்துக் கொண்டது நல்லது என்கிற உறுதியுடன் போராட முடிவு செய்துவிட்டார் என்கின்றனர்.
மொத்தமாக முடிக்க திட்டம்?: நடிகரின் எந்தவொரு வளர்ச்சியும் இனிமேல் இருக்கக் கூடாது என்றும் அவரை மொத்தமாக முடித்து வீட்டிலேயே உட்கார வைக்க என்ன பண்ண முடியுமோ அனைத்தையும் பண்ண ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்றும் அவரது தரப்பில் கூறுகின்றனர். ஆனால், எந்தவொரு தெளிவுமில்லாமல் தன்னுடன் இருப்பவர்கள் பண்ண முந்திரிக்கொட்டை தனம் தான் தன்னை பெரும் சிக்கலில் சிக்க வைத்திருப்பதை உணர்ந்துக் கொண்டு நடிகர் தற்போது இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என யோசித்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











