காதலனை கழட்டிவிட்டு முன்னணி நடிகருடன் ஊர் சுற்றும் அழகி.. இவரையாவது கல்யாணம் பண்ணுவாரா நடிகர்?

சென்னை: பிரபலமானவரின் காதலியாக அறிமுகமான அவர் முன்னணி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக உள்ளாராம்.

மாடலாகவும் அழகியாகவும் இருந்த அவர் காதலனால் தான் தமிழக மக்களிடையே பெரும் பிரபலமானார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்றார் காதலர்.

நிகழ்ச்சியில் நடிகர் பங்கேற்றதுமே ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார் அவர். அவரை ரசிக்க ஆரம்பித்த ரசிகர்கள், அவருடைய காதலி யார் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

நெருக்கம்

நெருக்கம்

அப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் காதலர் பெரிய வீட்டில் சக போட்டியாளருடன் நெருக்கமாக இருந்தார்.

சமாதானம்

சமாதானம்

இதனை பார்த்து நொந்துபோன காதலி கண்ணீரும் கம்பலையுமாக வீடியோ வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த காதலர், எல்லாவற்றையும் பேசி சமாதானம் செய்தார்.

பிரச்சனை தீர்ந்தது

பிரச்சனை தீர்ந்தது

இதனால் இருவரும் வெளி விழாக்களில் ஜோடியாக கலந்து கொண்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பிரச்சனை தீர்ந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

ஆனாலும் அவ்வப்போது காதலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் போட்ட பதிவுகள் இருவரும் பிரேக்கப் செய்துக்கொண்டதை போலவே இருந்தது. இதனால் குழப்பத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்.

நடிகருடன் நெருக்கம்

நடிகருடன் நெருக்கம்

ஆனால் இருவருமே தெளிவாக எதையும் கூறவில்லை. இந்நிலையில் காதலர் சொந்த ஊருக்கு செல்ல காதலி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் ஒருவருடன் அடிக்கடி அரைகுறை உடையில் ஊர் சுற்றி வருகிறார்.

வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா உங்கள் காதல் அவ்வளவுதானா? காதலருக்கு அல்வா கொடுத்துவிட்டீர்களா என கேட்காத கேள்வியெல்லாம் கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

வித்தைக்காரர்

வித்தைக்காரர்

அம்மணி சுற்றும் நடிகரும் சப்பை அல்ல. இதுவரை பலரை காதலித்து தோல்வி கண்டிருக்கிறார். விரலிலேயே வித்தைக்காட்டும் அந்த நடிகர் தற்போது திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் காத்திருக்கிறார்.

மகள்களுக்கு அட்வைஸ்

மகள்களுக்கு அட்வைஸ்

அவருடன் நடிக்க போகிறார்கள் என்றாலே நடிகைகளின் அம்மாக்கள் அலர்ட் ஆகி நடிகர் குறித்து அட்வைஸ் செய்து எச்சரிக்கையாய் இருக்குமாறு சொல்லி விடுவார்கள்.

குழப்பம்

குழப்பம்

காதலன் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை அழகி அம்மணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லையாம். அவருக்கும் தனது காதலன் மீது க்ரஷ் இருப்பதால் காதலன் தன்னைவிட்டு போய்விடுவாரோ என்ற அச்சத்திலும் குழப்பத்திலேயுமே இருந்தாராம் அம்மணி.

திருமணம்?

திருமணம்?

இந்நிலையில் அழகி அம்மணி நடிகரின் வலையில் விழுந்துள்ளார். ஒருவேளை இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க்கவுட் ஆகி காதலில் முடிந்தால் இவரையாவது நடிகர் திருமணம் செய்துகொள்வாரா இல்லை இவருக்கும் டாடா காட்டுவாரா என்று இப்போதே கிசுகிசுக்கிறதாம் கோடம்பாக்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X