»   »  ஊறுகாயைக் கொடுத்துட்டு பிரியாணியை பிடுங்கிட்டாங்களே.. புலம்பும் புதுமுகம்!

ஊறுகாயைக் கொடுத்துட்டு பிரியாணியை பிடுங்கிட்டாங்களே.. புலம்பும் புதுமுகம்!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க கிளைகள் இருக்கும் வசந்தமான ஹோட்டல்களின் அதிபர் மகன் அவர்.

அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. சென்னையின் ஐடி நகரம் ஒன்றை டைட்டிலாக கொண்ட அந்த படத்தில் பாடகி நடிகை ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டெழுத்து இயக்குநர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோ உள்ளே வந்ததில் ஒரு சுவராஸ்யம் இருக்கிறது. படத்தின் மூன்றெழுத்து தயாரிப்பாளரும் இயக்குனரும் ஹீரோவை கமிட் செய்தபோது இந்தாங்க இதுதான் உங்க சம்பளத்துக்கான அட்வான்ஸ்... மீதி படம் முடியறதுக்குள்ள வந்து சேர்ந்துடும் என்று சொல்ல ‘ஆஹா... நம்மகிட்ட பணம் கேட்டுடுவாங்களோ பயந்தா இவங்களே சம்பளம் கொடுக்குறாங்களே...' என வியந்து ஓகே சொல்லிவிட்டனர்.

ஷூட்டிங் போனபின்பு தான் இருவரும் வேலையை காட்ட தொடங்கியுள்ளனர். படத்தின் பட்ஜெட்டை விட எக்கச்சக்கமாக தாளித்துவிட்டனர் ஹீரோ குடும்பத்திடம். பின்னே அவங்களுக்கு கமிஷன் வேண்டாமா?

இப்ப இன்னொரு முறை தலைப்பை படிங்க...

English summary
A new hero from hotel giant has disappointed on his producer and director for cheating him in the name salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil