கவர்ச்சி நடிகையை ஏமாற்றினாரா சீனியர் நடிகர்?.. என்ன இது புதுசு புதுசா கிளம்புதே..

By Staff

சென்னை: கவர்ச்சி நடிகையை சீனியர் நடிகர் அனுபவித்து ஏமாற்றிவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் புது கிசுகிசு கிளம்பியுள்ளது.

சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை அவர்களை ரசிகர்கள் ரசித்துக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால் இந்த கவர்ச்சி நடிகையோ வெறும் கவர்ச்சி காண்பித்து மட்டும் சினிமாவில் கோலோச்சவில்லை. தன்னுடைய சிறந்த நடிப்பாலும் பல வருடங்கள் கோலோச்சினார்.

A new rumor has started in Kodambakkam that the senior actor cheated on the actress

செம க்ரேஸ்: இந்த நடிகைக்கான க்ரேஸ் ரசிகர்களிடம் எந்தக் காலகட்டத்திலும் உச்சக்கட்டமாகவே இருக்கும். அவரது நடை, உடை, பாவனை, பேசும் விதம் அத்தனையையும் ரசித்து தங்களையே தொலைத்தனர் ரசிகர்கள். ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை ஜாம்பவான்கள்கூட நடிகையோடு ஒரு ஃப்ரேமில் வந்துவிடமாட்டோமா அவரை தொட்டுவிடமாட்டோமா என்றெல்லாம் ஏங்கியிருக்கிறார்கள்.

வந்து நடித்த நடிகர்: உச்சக்கட்டமாக பக்கத்து மாநில பெரிய நடிகர் இந்த நடிகையுடன் நடிக்க வேண்டுமென்பதற்காக தன்னுடைய படத்திற்காக சென்னைக்கு வந்து இவருடன் நடித்துவிட்டு சென்றார். அந்த அளவுக்கு அம்மணி படுபிஸி. என்னதான் நடிகை உச்சத்தில் இருந்தாலும் ரொம்பவே வெகுளியானவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. யாரின் துணையும் இல்லாமல் வந்ததால் என்னவோ தன்னை சுற்றி ஒரு வலுவான வட்டத்தையும் அவர் போட்டுக்கொண்டாராம்.

ஊடுருவிய நடிகர்: அந்த நடிகையை எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் என்று பலர் முயற்சித்தார்கள். ஆனால் அவரோ நான் ஸ்க்ரீனில் மட்டும்தான் கவர்ச்சி நடிகை தனிப்பட்ட விஷயத்தில் அப்படிப்பட்டவர் இல்லை என்பதை பலரிடம் கறாராக சொல்லிவிடுவாராம். இருந்தாலும் ஒரு சீனியர் நடிகர் அந்த நடிகையின் வலுவான வளையத்தை தாண்டி ஊடுருவிவிட்டாராம்.

ஏமாற்றினாரா?: மற்றவர்கள் போல் இல்லாமல் இந்த நடிகரிடம் வேறு ஏதோ வித்தியாசமான விஷயமும் கொஞ்சம் அக்கறையும் இருந்ததால் ஊடுருவிய நடிகரிடம் தன்னையும் தன் மனதையும் கொடுத்துவிட்டாராம். சொல்லப்போனால் தனக்கென ஒரு நிழலை, துணையை தேடிக்கொண்டிருந்த நடிகைக்கு நடிகரின் அரவணைப்பு ஆசுவாசம் தந்ததாம். ஆனால் நடிகரோ இது கட்டிலோடு முடிக்க வேண்டிய உறவு என்பதில் ஆரம்பம் முதலே தெளிவாக இருந்தாராம்.

ஒருகட்டத்தில் நடிகர் தன்னிடம் மனதை எதிர்பார்க்கவில்லை என்பதை உணர்ந்துகொண்ட நடிகை உச்சக்கட்ட மன வேதனைக்கே சென்றாராம். அப்படிப்பட்ட சூழலில் இன்னொருவருடன் திடீரென ஒரு காதல் ஏற்பட அவரும் பாதியில் போக விரக்தியிலேயே உயிரிழந்தாராம் நடிகை. குறிப்பாக நடிகை தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சிலரை நம்பி ஏமாந்தார் என்றால் அதற்கான முதல் விதையை போட்டது சீனியர் நடிகர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X