மாலையை கழற்றியதும் வேலையை காட்டிய வம்பு ஹீரோ... வீட்டைக் காலி பண்ணச் சொன்ன இயக்குனர்

By

சென்னை: சபரிமலைக்கு மாலை போட்டிருந்த அந்த ஹீரோ, மாலையை கழற்றியதும் மீண்டும் வேலையை காட்டியதால், அவரோடு சுற்றிக்கொண்டிருக்கும் நடிகருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த வம்பு ஹீரோ பற்றி, கடந்த சில வருடங்களாகவே ஏகப்பட்ட பஞ்சயாத்து. படப்பிடிப்புக்கும் ஒழுங்காகச் செல்ல மாட்டார் என்பது அவர் மீது வைக்கும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு.

அவரை வைத்து படமெடுத்த பல தயாரிப்பாளர்கள் இந்த விவகாரங்களுக்காக, என்னென்னவோ செய்து பார்த்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

தொடங்கியது பஞ்சாயத்து

தொடங்கியது பஞ்சாயத்து

இந்த நிலையில்தான் அந்த ஹீரோவை வைத்து படமெடுக்க முன்வந்தார், அந்த தயாரிப்பாளர். கட்சிக் கூட்டத்தின் தலைப்பை அந்த படத்துக்கு வைத்திருந்தார்கள். மங்காத்தா ஆடிய இயக்குனர் படத்தை இயக்க முன்வந்தார். ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே, ஹீரோ வழக்கம் போல வேலையை காட்ட, தொடங்கியது பஞ்சாயத்து.

அப்போதும் டவுட்தான்

அப்போதும் டவுட்தான்

பின்னர் ஹீரோவின் அப்பாவும் அம்மாவும் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து படத்தைத் தொடங்க வைத்தனர். தயாரிப்பாளருக்கு அப்போதும் டவுட்தான். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்தது. இந்நிலையில்தான் ஹீரோ திடீரென்று சபரிமலைக்கு மாலையெல்லாம் போட்டு நல்லபிள்ளையானதால் நம்பினார்.

இங்க இன்னா சொல்லுது

இங்க இன்னா சொல்லுது

கோயிலுக்கு போய் விட்டு மறுநாளே, படத்துக்காக உடலை குறைக்கிறார், உப்புமாவாக தின்கிறேன் என்றெல்லாம் செய்தியை பரபரப்பிவிட்டு, ஹீரோ தன் வேலையை தொடங்கி விட்டார். அதாவது, ஹீரோவின் நண்பராக இருப்பவர், இங்க இன்னா சொல்லுது நடிகர். இன்னா சொல்லுது நடிகரின் மனைவி கர்ப்பிணி மகளை கவனித்துக்கொள்ள கேரளா சென்றுவிட்டார் மூன்று மாதம்.

சிரித்து சமாளித்தார்

சிரித்து சமாளித்தார்

இதனால் வீடு சும்மா கிடந்தது. அதை அப்படியே அந்த ஹீரோ உள்ளிட்ட நடிகர்கள், கப்பென பிடித்துவிட்டார்கள். தினமும் மேற்படி புகை, போதை என வீட்டை ரணகளப்படுத்தி விட்டார்களாம். தினமும் இந்த வீட்டில் இருந்து, இப்படி நாத்தம் அடிக்குதே என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் விசாரித்தால், இன்னா சொல்லுது நடிகரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சிரித்து சமாளித்தார்.

காமெடி இயக்குனர்

காமெடி இயக்குனர்

இது தொடர்ந்ததால், பெரும் பஞ்சாயத்தாகிவிட்டதாம். பிறகு உடனடியாக அந்த வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். வழியே இல்லாமல் இடம்மாறிக் கொண்டிருக்கிறது பொருட்கள்.
அந்த வீடு, காமெடி படம் இயக்கும், இன்ஷியலை பெயருக்கு பின்னால் வைத்திருக்கிற இயக்குனருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X