ஏற்கனவே அந்த டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து... இப்ப இதுவேறயா?
சென்னை: கண்ணாடி இயக்குனருக்கும் உசர நடிகருக்கும் இப்போது மீண்டும் ஒரு பஞ்சாயத்து என்கிறார்கள்.
கண்ணாடி இயக்குனர் உசர ஹீரோவை வைத்து டிடெக்டிவ் என்ற படத்தை இயக்கினார். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவருகிறார். அதில் நடித்த நடிகர்களே இதிலும் பெரும்பாலும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது.

கடுமையான கோபம்
படப்பிடிப்பு சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், எல்லாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நின்ற நிலையில், இரண்டு மூன்று நாள் ஷூட்டிங்கை கேன்சல் செய்தாராம் இயக்குனர். அங்கு வாடகை, ஷூட்டிங் செலவு என்று எக்கச்சக்கமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கு கடுமையான கோபம். அந்த ஹீரோதான் தயாரிப்பாளரும். இதனால் கோபத்தை மனதுக்குள் வைத்திருந்தாராம்.

விரோதமாக மாறியது
ஒரு நாள் பார்ட்டியில் மெதுவாக இருவருக்கும் ஆரம்பித்த பிறகு, பிறகு மெல்ல மெல்ல விரோதமாக மாறியதாம். அடுத்தடுத்த நாள் படப்பிடிப்பில் வாக்குவாதமாகி, ஈகோவாகி ஆகிவிட்டது. பிறகு இந்த மோதல் அடுத்த லெவலுக்குச் சென்றது. அதாவது இருவரும் திடீரென அடிதடியில் இறங்கி விட்டதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

சமாதானமானார்
இது சில மாதங்களுக்கு முன் நடந்த கதை. பிறகு பணம் போட்ட ஹீரோ, படத்தை முடிக்க வேண்டுமே என்று இயக்குனருடன் சமாதானமானார். ஷூட்டிங் தொடர்ந்தது. ஊருக்குத் திரும்பினர். இயக்குனர் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமானார். இதற்கிடையே அவர் இயக்கிய மற்றொரு படம் ரிலீஸ் ஆனது. அந்த வேலையில் தீவிரம் காட்டினார் இயக்குனர்.

ஹீரோ கம் தயாரிப்பாளர்
பிறகு அது ரிலீஸ் ஆனதும் இதன் வேலை ஆரம்பமானது. இப்போது படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார், ஹீரோ கம் தயாரிப்பாளர். இந்த நிலையில்தான், இயக்குனர் கூலாக, நான் குறைவான சம்பளம் வாங்கியிருக்கேன். எனக்கு இன்னும் அதிகமா சம்பளம் வேணும் என்று கேட்டாராம் இயக்குனர். ஏற்கனவே லண்டன் ஷூட்டிங்கில், செலவை எக்கச்சக்கமாக இழுத்து வைத்ததாக நொந்துபோயிருக்கும் ஹீரோ, இப்போது ஓவர் கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











