எனக்குன்னே கிளம்பி வருவாங்களோ?: கவலையில் பிரபல இயக்குனர்
Recommended Video

சென்னை: பிரபல இயக்குனர் ஒருவர் கவலையில் உள்ளாராம்.
இயக்குனர் அவதாரம் எடுத்ததில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் அவர். அவர் இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. காசை தண்ணீராக செலவு செய்து படத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஹீரோ தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சர்ச்சை
பிரமாண்ட படத்தின் ஹீரோ நாட்டு நடப்பு பற்றி அளித்த பேட்டி மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அவர் ஒரு கட்சிக்கு கிட்டத்தட்ட பகிரங்க ஆதரவு தெரிவித்துவிட்டார். அதை பார்த்த மக்கள் அதான பார்த்தோம், இவர் சும்மா எல்லாம் அரசியலுக்கு வர மாட்டாரே என்று கமெண்ட் அடிக்கத் துவங்கிவிட்டனர்.

ரிலீஸ்
பிரமாண்ட படம் பல காலம் இழுத்துக் கொண்டே இருந்து ஒரு வழியாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த நடிகர் இப்படி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளது படத்திற்கு நல்லது அல்ல. அவர் ஆதரவு தெரிவித்துள்ள கட்சியினர் நிச்சயமாக இந்த படத்தை எதிர்த்து விமர்சித்து இலவச விளம்பரம் கொடுக்கப் போவது இல்லை.

கவலை
நடிகரின் பேட்டியும், அதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எரிச்சலும், அதிருப்தியையும் பார்த்து பாவம் இயக்குனர் தான் கவலையில் உள்ளாராம். முன்னதாக ஹீரோயினை அரைகுறை ஆடையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கூறி கூறி ஓய்ந்துவிட்டார். இந்நிலையில் நடிகர் வேறு திடீர் என்று சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார்.

வெற்றி
நடிகரின் தேவையில்லாத பேச்சு படத்திற்கு நெகட்டிவ் விளம்பரமாகிவிடுமோ என்ற பயம் தான் இயக்குனருக்கு. அவரின் கடின உழைப்பு நடிகரின் பேட்டியால் வீணாகிவிடக் கூடாது என்பதே அவரின் நினைப்பு. வெற்றி இயக்குனர் என்று பெயர் எடுத்தவர். அந்த பெயரை காப்பாற்றிக் கொள்ள விரும்புவதில் தவறு இல்லையே.


Click it and Unblock the Notifications











