கண்ணாடி இயக்குனரும் டிடெக்டிவ் நடிகரும் டிஷ்யூம் டிஷ்யூம்... வெளிநாட்டில் வில்லங்க பஞ்சாயத்து?
சென்னை: கண்ணாடி இயக்குனருக்கும் டிடெக்டிவ் நடிகருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏறபட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்ணாடி இயக்குனர் அந்த ஹீரோவை வைத்து டிடெக்டிவ் என்ற படத்தை எடுத்தார். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவருகிறார். அதில் நடித்த நடிகர்களே இதிலும் பெரும்பாலும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது.

விரோதமாக...
படப்பிடிப்பு சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் பார்ட்டியில் மெதுவாக இருவருக்கும் ஆரம்பித்த ஈகோ, பிறகு மெல்ல மெல்ல விரோதமாக மாறியதாம்.

அடுத்த லெவல்
பின்னர் அடுத்தடுத்த நாள் படப்பிடிப்பில் வாக்குவாதமாக மாறிக் கொண்டிருந்த இந்த ஈகோ மோதல் பின் அடுத்த லெவலுக்குச் சென்றது.

படப்பிடிப்பில்
அதாவது இருவரும் திடீரென அடிதடியில் இறங்கிவிட்டார்களாம். படப்பிடிப்பில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

இளம் பெண்ணிடம்...
இது ஒரு புறம் இருக்க, ஹீரோவுடன் இருந்த மற்றொரு நடிகர், படத்துக்கு பைனான்ஸ் செய்த இளம் பெண் ஒருவரிடம் பஞ்சாயத்தை இழுக்க, அது போலீஸ் வரை சென்றதாகவும் பிறகு சுமூகமாக முடித்ததாகவும் சொல்கிறார்கள், கோலிவுட்டில்.


Click it and Unblock the Notifications











