நைட் பார்ட்டியில் மயங்கி விழுந்த தொகுப்பாளினி.. மானத்தை காப்பாத்திய டாக்டர் நடிகை!

By Staff

சென்னை: நடிகை, நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் வரும் தொகுப்பாளினிகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளினியாக வலம் வந்த ஒல்லி தொகுப்பாளினி தற்போது விவகாரமான சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.

தொகுப்பாளினி என்றால், அழகு பதுமையாக வந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் இரண்டுவார்த்தை பேசிவிட்டு போய்விட வேண்டும் என்கிற என்ற எண்ணத்தை மாற்றியவர் தான் இந்த தொகுப்பாளினி. என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் வரும் பிரபலத்தை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த தொகுப்பாளினி. எந்த முன்னணி நடிகையோ, நடிகராக இருந்தாலும், இவர் இருந்தால் ஒகே என்று நினைக்கும் அளவிற்கு அவர்களுடன் எதார்த்தமாக பேசக்கூடியவர்.

gossip tv gossip kishu kishu

தொகுப்பாளினி: அப்படி அனைவருக்கும் பிடித்தமான இந்த நடிகைக்கு அந்த டிவி சேனலில் தனி மரியாதையும் உண்டு. சின்னத்திரையில் மட்டும் மாஸ் காட்டி வந்த அந்த நடிகைக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பிரபலமான மூன்று எழுத்து நடிகர் ஒருவர் இயக்கிய படத்தில் நடித்தார். ஏற்கனவே இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்த தொகுப்பாளினி அந்த படத்தில் நடித்ததன் மூலம் அது கன்பார்ம் ஆனது. கடைசியில் அது பெரிய பஞ்சாயத்தானது. இந்த விவகாரத்தால் சின்னத்திரையில் இவருக்கு இருந்த நல்ல பெயர் கெட்டுப்போனது தான் மிச்சம்.

விவாகரத்து: இந்த பஞ்சாயத்திற்கு பிறகும், அந்த பிரபல தொலைக்காட்சி அந்த தொகுப்பாளினியை விட்டு கொடுக்காமல் பல வாய்ப்புகளை அவருக்கு கொடுத்தது. இந்த நேரத்தில், பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சேனலே திருவிழாப்போல கொண்டாடியது. ஆனால், திருமணமான ஓராண்டுக்குள் அந்த தொகுப்பாளினி கணவரைவிட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார்.

ரகசிய திருமணம்: திருமணத்தால் முறிந்த உறவை மீண்டும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்ததால், அந்த மூன்று எழுத்து நடிகர் வீட்டில் மீண்டும் பிரச்சனை ஏற்பட, அவரை விட்டுபிரிந்தார். மீண்டும் ஒல்லி தொகுப்பாளினி யாருக்கும் தெரியாமல் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமணத்தை விமர்சையாக செய்தால்தானே சிக்கல், ஒருவேளை நாளை பிரச்சனை ஏற்பட்டு பிரியும் நிலைமை வந்தால், பெரிய பிரச்சனையாகும் என்பதாலும், மீண்டும் மீடியாக்களில் பெயர் அடிபட்டு குடும்ப மானமே போய்விடும் என்று கணவரிடம் ஏதேதோ சாக்கு சொல்லி இரண்டாம் திருமண ரகசியத்தை வெளியில் கசியவிடாமல் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம் அந்த தொகுப்பாளினி.

நைட் பார்ட்டியில் கூத்து: இப்போது சினிமா,சின்னத்திரை என எதிலும் தலைகாட்டாமல் இருக்கும் அந்த அம்மணி, உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லிவிட்டு அனைத்தில் இருந்தும் ஒதுங்கி இருக்கிறார். ரகசிய கணவர் ஒரு புறம் சம்பாதித்து கொட்ட, ஒல்லி தொகுப்பாளினியோ மீண்டும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நைட் பார்ட்டியில் கூத்து அடித்துவருவதாக சொல்லப்படுகிறது.

மயங்கி விழந்த தொகுப்பாளினி: அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் இவர், படுக்கை அறை சமாசாரத்தில் சும்மா கில்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக விவகாரமான மாத்திரையை பயன்படுத்தி வருகிறாராம். அண்மையில் இவர், வாட்டசாட்டமான நடிகர் ஒருவருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டி முடிந்து கசமுசா விவகாரத்திற்காக பயன்படுத்தும் மாத்திரையை பயன்படுத்தி உள்ளார். ஏற்கனவே பார்ட்டியில் அடித்த சரக்கு, கசமுசா மாத்திரையை சாப்பிட்டதால், ஓவர் டோஸாகி போக அங்கேயே மயங்கி விழுந்து இருக்கிறார்.

மானமே போச்சு: இதைப்பார்த்து பதறிப்போன வாட்டசாட்டமான நடிகர், விஷயம் வெளியில் தெரிந்தால் மானமே போய்விடும் என்று டாக்டர் நடிகைக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, ஓடிவந்த அந்த டாக்டர் நடிகை, சில நண்பர்களுக்கு போன் செய்து உதவிக்கு அழைத்து அவருக்கு யாருக்கும் தெரியாமல் சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சைக்கு பின் ஒல்லி தொகுப்பாளினி சுய நினைவுக்கு திரும்பி உள்ளார். இந்த விவகாரம் அந்த டாக்டர் நடிகை மூலமாகவே சினிமா வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X