எனக்குன்னு எங்கிருந்து தான் வருவாங்களோ?: கவலையில் இடுப்பழகி
சென்னை: இடுப்பழகி ஒன்று நினைக்க இயக்குனர்களோ வேறு மாதிரி நினைக்கிறார்களாம்.
ஹீரோக்களுக்கு இணையாக இல்லை இல்லை சில ஹீரோக்களை விட சூப்பராக டான்ஸ் ஆடுபவர் அந்த இடுப்பழகி நடிகை. திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஹோட்டல் ஆரம்பித்தார்.
ஹோட்டல் தொழில் கை கொடுக்காததை அடுத்து மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

இடுப்பழகி
செகன்ட் இன்னிங்ஸில் போராடிக் கொண்டிருக்கும் நடிகைக்கு உச்ச நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவர் கதாபாத்திரம் பிளாஷ்பேக்கில் மட்டுமே வருமாம். உச்ச நடிகருக்கு சின்னப் புள்ள நடிகை தான் ஜோடி என்று கூறப்படுகிறது. நடிகைக்கு இந்த படமாவது கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வில்லி
இடுப்பழகி நடிகை வெயிட்டான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். ஆனால் இயக்குனர்களோ அவரை வில்லியாக நடிக்குமாறு கேட்கிறார்களாம். நீங்கள் ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். அப்படி நீங்கள் வில்லத்தனம் செய்த படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதனால் எங்கள் படத்திலும் வில்லியாக நடித்தால் நிச்சயம் ஹிட் தான் என்கிறார்களாம்.

சோதனை
நான் ஒன்று நினைத்தால் இயக்குனர்கள் வேறொன்று நினைக்கிறார்களே. கடவுளே, இது என்ன சோதனை என்று நடிகை நொந்து கொண்டிருக்கிறாராம். இடுப்பழகி உச்சத்தில் இருந்த போது அவருக்கு இணையாக மார்க்கெட் வைத்திருந்த நடிகை திருமணம், குழந்தைகள் பெற்ற பிறகும் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்பு
ஒரு காலத்தில் இடுப்பழகியின் கால்ஷீட் வாங்க இயக்குனர்கள் அவர் வீட்டிற்கு படையெடுத்தனர். தற்போது தன்னைத் தேடி பட வாய்ப்பு வராதா என்று நடிகை ஏங்கும் நிலை வந்துவிட்டது. அவரை தேடி வரும் வாய்ப்புகளில் பல அவருக்கு பிடிக்கவில்லையாம். சும்மா வில்லத்தனம் செய்து தான் பாருங்களேன். யார் கண்டால் அது செட்டாகி நீங்கள் மீண்டும் உச்சத்திற்கு வந்துவிடலாம். வில்லி கதாபாத்திரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதையே ஒரு சவாலாக எடுத்து சாதிக்கலாமே.


Click it and Unblock the Notifications









