ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்!

மகள் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் நடிகர் அப்பாவை சகட்டுமேனிக்கு நெட்டிசன்கள் திட்டியுள்ளனர்.

Recommended Video

இளம் நடிகைக்கு அவரே தான் எதிரி | அப்பா பெயரை கெடுக்கும் மகள்- வீடியோ

சென்னை: கொண்டாட்ட மனநிலையில் மகள் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால், தந்தை நடிகரை நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர். இதனால் வேகவேகமாக போட்ட வேகத்திலேயே தனது டிவீட்டை மகள் டெலிட் செய்து விட்டார்.

இம்முறையாவது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என தடபுடலாக அவரது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் நடிகர். மகளும் புரட்சிகரமான முடிவு எடுத்திருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், புதுமணத் தம்பதிக்கு உறவினர்கள் சிலர் உற்சாக விருந்து கொடுத்துள்ளனர். கொண்டாட்ட மனநிலையில் மகளும் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

அதிர்ச்சி:

அதிர்ச்சி:

இங்கு தான் ஆரம்பித்தது பிரச்சினை. அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சாப்பாட்டு மேஜையில் சில உற்சாக பான பாட்டில்களும் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகரின் ரசிகர்கள் சகட்டு மேனிக்கு மகளை வசை பாடத் தொடங்கி விட்டனர்.

உடனடியாக டெலிட்:

உடனடியாக டெலிட்:

அரசியலில் குதித்துள்ள அப்பாவிற்கு கெட்ட பேர் ஏற்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாமா என பலர் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். தாமதமாக சுதாரித்த மகள், உடனடியாக தான் வெளியிட்ட புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார்.

இதுதான் கைமாறா?

இதுதான் கைமாறா?

ஆனாலும், அதற்குள் அந்தப் புகைப்படத்தை ஸ்கீன்ஷாட் எடுத்த சிலர், ‘முதல்வராகும் கனவில் இருக்கும் அப்பாவிற்கு இப்படி ஒரு மகளா?' என சமூகவலைதளங்களில் மகளை திட்டி வருகின்றனர். மகளின் நலனிற்காகப் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்து வரும் அப்பாவிற்கு மகள் செய்யும் கைமாறு இது தானா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த மாதிரி விருந்தா?

அந்த மாதிரி விருந்தா?

ஏற்கனவே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்திலும், பின்னணியில் மதுபானப் பாட்டில்கள் இருந்தது. இதன்மூலம் அங்கு மது விருந்து அளிக்கப்பட்டதா என்ற விவாதம் சமூகவலைதளங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X