அவ்ளோ நல்லவரா நீங்க, நம்ப முடியலையே?: வாரிசு நடிகரை பார்த்து வியக்கும் கோலிவுட்
சென்னை: பட விழாவில் வாரிசு நடிகர் நடந்து கொண்டதை பார்த்தால் அவ்வளவு நல்லவரா மாறிவிட்டீர்களா என்றே வியக்கத் தோன்றுகிறது.
வாரிசு நடிகரின் பெயரை சொன்னால் இயக்குனர்களுக்கு பி.பி. ஏறும். அந்த அளவுக்கு இயக்குனர்களை படாதபாடு படுத்தினார். அதிலும் ஒரு இயக்குனரை கதறவிட்டார்.
இப்படி சேட்டை செய்த அந்த நடிகர் தற்போது அநியாயத்திற்கு மாறிவிட்டார்.

படப்பிடிப்பு
இளம் இயக்குனரை கதற விட்ட பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் அவர் வந்ததாக சரித்திரமே இல்லை என்று குற்றம் சாட்டியவர்களையே வாயடைத்துப் போக வைத்துவிட்டார். காதலை வித்தியாசமாக காட்டும் இயக்குனரின் படப்படிப்புக்கு சொன்ன நேரத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தார். மேலும் எந்த பிரச்சனையும் செய்யாமல் டப்பிங்கும் பேசினார்.

வாரிசு நடிகர்
முன்பெல்லாம் நடிகர் வந்தாலே அந்த இடத்தில் பிரச்சனை என்ற நிலை மாறிவிட்டது. தற்போது எல்லாம் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். யாரிடமும் பிரச்சனை செய்வது இல்லை. திமிர்த்தனமாக நடப்பது இல்லை. எந்த கிசுகிசுவிலும் சிக்குவது இல்லை. அட வாரிசு நடிகரா இப்படி மாறிவிட்டார் என்று அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

பேச்சு
வாரிசு நடிகர் மைக்கை பிடித்தால் ஆத்து ஆத்து என்று சொற்பொழிவு ஆற்றுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் நடித்த பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் மேடைக்கு சென்ற வேகத்தில் இறங்கி வந்துவிட்டார். அவர் நிறைய பேசுவார் என்று எதிர்பார்த்தால் இயக்குனருக்கு நன்றி மட்டும் கூறிவிட்டு மேடையை விட்டு ஓடிவிட்டார்.

அமைதி
இப்படி பேசாமல் இருப்பது நடிகரின் கேரக்டரே இல்லையே என்று அவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அவரின் படம் பேசியதை விட அவர் பேசியது தானே அதிகம். தற்போது உல்டாவாக நடந்து கொள்கிறாரே. நிஜமாகவே மாறிவிட்டாரா, அதுக்கென்று இந்த அளவுக்கா?. நம்ப முடியவில்லையே. மாறினால் சரி என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











