»   »  பெரிய ஹீரோ, ரூ.5 கோடி இல்லாட்டி நடையை கட்டு: உயர்ந்த நடிகையின் கன்டிஷன்

பெரிய ஹீரோ, ரூ.5 கோடி இல்லாட்டி நடையை கட்டு: உயர்ந்த நடிகையின் கன்டிஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய ஹீரோக்களுடன் தான் நடிப்பேன், சம்பளம் ரூ. 5 கோடி வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம் உயர்ந்த நடிகை.

உயர்ந்த நடிகை நடிப்பில் வெளியான பிரமாண்ட படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து நடிகை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். சும்மாவே அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

A tall actress's conditions

இந்நிலையில் நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று தற்போது அடம் பிடிக்கிறாராம். பெரிய ஹீரோ, சம்பளம் ரூ. 5 கோடி கொடுப்பதாக இருந்தால் என் கால்ஷீட் தருகிறேன் இல்லை என்றால் அப்படியே நடையை கட்டுங்கள் என்று இயக்குனர்களிடம் கூறுகிறாராம்.

இதற்கிடையே அவரை தேடி வந்த வரலாற்று பட வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். அந்த படத்தில் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் என்றாலும் அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு பெரிய ஹீரோக்கள் இல்லையாம்.

அம்மணி தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

English summary
A tall actress is reportedly ready to act in leading heroes movies only and that too with Rs. 5 crore remuneration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil