நான் யார் தெரியும்ல, எனக்கேவா?: நடிகைகளால் கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர்
சென்னை: உயர்ந்த நடிகர் ஒருவர் கோபத்தில் குமுறிக் கொண்டிருக்கிறாராம்.
உயர்ந்த நடிகர் ஒருவர் புதுப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று அவர் எதிர்பார்க்கிறார். படத்தில் ஒரு குத்துப்பாட்டு உள்ளது.
அந்த பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போடுமாறு முன்னாள் ஆபாச பட நடிகையை அழைத்துள்ளார்கள்.

முடியாது
நடிகரின் படத்தில் குத்தாட்டம் போட அந்த முன்னாள் ஆபாச பட நடிகை மறுத்துவிட்டாராம். இத்தனைக்கும் குத்தாட்டம் போடச் சொன்னால் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு வந்து ஆடுவார் அவர். ஏனோ உயர்ந்த நடிகர் படத்திற்கு மட்டும் முடியாது என்று கூறிவிட்டார்.

குத்துப் பாட்டு
அந்த நடிகை மறுத்த பிறகு தெலுங்கு நடிகை ஒருவரை அணுகி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுங்க என்று கேட்டிருக்கிறார்கள். அந்த அம்மணியும் சாரி, வேறு ஆளைப் பாருங்க என்று கூறிவிட்டாராம்.

மார்க்கெட்
கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்று அங்கும் வெற்றி பெற முடியால் அல்லாடும் நடிகை தான் உயர்ந்த நடிகரின் படத்தில் குத்தாட்டம் போட சம்மதித்திருக்கிறார்.

கோபம்
ஒரு முன்னணி நடிகன் நான் என் படத்திலேயே ஆட முடியாது என்கிறார்களே இந்த நடிகைகள் என்று உயர்ந்த நடிகர் கோபத்தில் குமுறிக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











