இப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க
சென்னை: தமிழ் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகில் மதிப்பு இல்லை என்று இளம் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நடிக்கத் தெரிந்த நடிகை கோலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அவர் அடம்பிடிப்பது இல்லை.
இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்கச் சொன்னாலும் சந்தோஷமாக நடிக்கிறார்.

முன்னணி நடிகர்கள்
ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் சிறப்பாக நடிப்பார் என்று அந்த தமிழ் நடிகை பெயர் வாங்கியுள்ளார். முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து நல்ல பெயரும் வாங்கிவிட்டார். ஆனாலும் தமிழ் திரையுலகில் அவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே பார்க்கப்படுகிறார். அவரை பெரிய படங்களில் யாரும் ஹீரோயினாக போடுவது இல்லை. தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் நடிகை
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு மதிப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த உண்மையை எந்த தமிழ் நடிகையாவது உரக்கச் சொன்னால் அவரை பிடிக்காது. இந்நிலையில் அந்த இளம் நடிகையோ தமிழ் திரையுலகில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு மதிப்பே இல்லை என்று பளிச்சென்று கூறியுள்ளார்.

இந்தி
மலையாளம், இந்தி திரையுலகில் எல்லாம் அந்தந்த மொழி தெரிந்த நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு தனி மரியாதை உள்ளது. தாய் மொழி பேசும் நடிகைகள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் தமிழ் திரையுலகில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது என்கிறார் அந்த இளம் நடிகை. தமிழ் திரையுலகில் வேறு மொழி பேசும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒதுக்கிடுவிடுவார்கள்
ஏற்கனவே உங்களை போன்று இப்படி கூறிய ஒரு நடிகை நல்ல திறமை இருந்தும் ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் நீங்க வேறு தைரியமாக இப்படி எல்லாம் பேசாதீங்கோ. அதன் பிறகு உங்களையும் ஒதுக்கிவிடுவார்கள் என்று அவரின் ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழ் சினிமா வந்தாரை மட்டும் தான் வாழ வைக்குமா, நம் தமிழ் பெண்களை வாழ வைக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











