மூன்று எழுத்து நடிகருடன் நடிக்கக்கூடாது... மனைவிக்கு கண்டிஷன் போட்ட டாப் நடிகர்!
சென்னை : அந்த மூன்று எழுத்து நடிகருடன் மட்டும் நடிக்கக்கூடாது என்று மனைவிக்கு டாப் நடிகர் கண்டிஷன் போட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பிரபல வாரிசு நடிகரின் மகனான டாப் நடிகர் தற்போது, அட்டகாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தமிழ் ஆடியன்சின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இவர் சினிமாவிற்கு வந்த புதில், சுமாரான படங்களிலேயே நடித்து வந்தார். ஆனால், தனது திறமையை நிரூபிக்கும் ஒரு படத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்து விட்டார்.

கடுமையான முயற்சி
இவர் வாரிசு நடிகரின் மகனாக இருந்தாலும், தனது தந்தையின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முழுக்க தனது கடுமையான முயற்சியால், தமிழ் சினிமாவில் டாப் நடிகர் என்ற உச்சத்தை தொட்டுள்ளார். கோலிவுட்டில் மாஸ் காட்டிய அந்த டாப் நடிகர் தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி, பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.

காதல் திருமணம்
டாப் நடிகரான இவர், தன்னுடன் இணைந்து நடித்த பப்ளி நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள், தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

கண்டிஷன் போட்ட நடிகர்
ஆனால், திருமணத்திற்கு முன்பே டாப் நடிகர் தனது மனைவியின் சினிமா கேரியரில் தலையிட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் எந்த நடிகருடன் நடிக்க வேண்டும், எந்த நடிகருடன் நடிக்கக்கூடாது என்பதை டாப் நடிகர் தான் முடிவு செய்து சொல்லுவாராம்.

அந்த நடிகருடன் நடிக்கக்கூடாது
இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மூன்று எழுத்து நடிகர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்துள்ளார். அப்போது, பப்ளி நடிகைக்கு மூன்று எழுத்து நடிகருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், அந்த டாப் நடிகரோ, மூன்று எழுத்து நடிகருடன் நடிக்கவே கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். அப்போது கல்யாண பிஸியில் பப்ளி நடிகை இருந்ததால், அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications