அப்போ யாரையும் மதிக்கல.. இப்போ யாரும் மதிக்க மாட்றாங்க.. கூப்பிடாமலே பார்ட்டிகளுக்கு போகும் நடிகை!

சென்னை: முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு யாரையும் மதிக்காமல் இருந்த நடிகை தற்போது பார்ட்டிகளுக்கு அழைக்காமலே என்ட்ரி கொடுத்து வருகிறாராம்.

வட மாநிலத்தை பூர்விகமாக கொண்ட அந்த நடிகை 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிப்புக்கு அறிமுகமனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வளைய வந்த நடிகை பாலிவுட்டிலும் ஒரு கை பார்த்தார்.

தமிழில் பீக்கில் இருந்த முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு பல நடிகைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டார். இதனால் வந்த வேகத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பாலிவுட்டிலும் கொடி

பாலிவுட்டிலும் கொடி

போதா குறைக்கு உச்ச நடிகருடன் ஜோடி சேர்ந்தார் அம்மணி. அந்தப் படமும் பட்டைய கிளப்ப, யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையாம். சம்பளத்தை உயர்த்தி, ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு தயாரிப்பாளர்களை ஓட்டம் பிடிக்க வைத்தார். தொடர்ந்து பாலிவுட்டிலும் அம்மணியின் கொடி பறந்தது.

மீண்டும் ஆசை

மீண்டும் ஆசை

இந்நிலையில் தனது நண்பரான வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் ஓராண்டு முழுவதும் சினிமா பக்கமே எட்டிப் பார்க்காத நடிகை மீண்டும் நடிக்கும் ஆசைப்படுகிறாராம். இதற்காக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என முயற்சி செய்து வருகிறார்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இதற்காக தொடர்ந்து குளியல் வீடியோ முதல், உள்ளாடை அணியாத பேட்டோ வரை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு திக்குமுக்காட செய்தார். அரைகுறை ஆடையில் ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றார். ஆனாலும் பட வாய்ப்புகள் கிடைத்த பாடில்லையாம்.

இரவு பார்ட்டி

இரவு பார்ட்டி

தன்னுடன் ஜோடி போட்ட நடிகர்களும் தன்னை ஏறேடுத்துக் கூட பார்ப்பது இல்லையாம் இதனால் நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் பங்கேற்கும் இரவு விருந்துகளில் யாரும் அழைக்காமலேயே ஆஜராகி விடுகிறாராம் நடிகை. உச்ச நடிகருக்கு ஜோடி போட்டதால் அப்போது யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டதால் இப்போது நடிகைக்கு இந்த நிலைமை என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X