ஓவர் பிடிவாதம்.. குறைந்த வாய்ப்புகள்.. உச்சக்கட்ட கவர்ச்சிக்கு தயாரான நம்பர் நடிகை.. இதான் காரணமாம்!

Recommended Video

Top actress in Tamil cinema is ready for marriage | Kollywood Gossip

சென்னை: நடித்தால் அப்படிதான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்த உச்ச நடிகை தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்ட க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அந்த நடிகை. உச்ச நடிகர்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறார்.

அடுத்தடுத்து காதல் தோல்விகளால் மன உளைச்சலில் இருந்த அந்த நடிகை, காதலரின் நம்பிக்கை துரோகத்தால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் அசராமல் படங்களில் நடித்து வந்தார் அந்த நடிகை.

இயக்குநர் அரவணைப்பு

இயக்குநர் அரவணைப்பு

எப்படியோ தனது விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமைக்குரிய அவர், தற்போது இயக்குநர் ஒருவரின் அரவணைப்பில் இருந்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சில படங்களில் நடித்தார்.

தனக்கு முக்கியத்துவம்

தனக்கு முக்கியத்துவம்

அந்த படங்கள் நடிகை மீதான கண்ணோட்டத்தை மாற்றியது. வழக்கமாக நடிகர்களுடன் டூயட் பாடும் கதாப்பாத்திரத்தில் நடித்த அவருக்கு அந்த படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. இதனால் நடிகைக்கும் தனது நடிப்பின் மீது நம்பிக்கை அதிகரித்தது. இதனால் நடித்தால் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பேன் என உறுதியாக இருந்தார் நடிகை.

நடிகையின் பிடிவாதம்

நடிகையின் பிடிவாதம்

ஆனால் அதுபோன்ற வாய்ப்புகள் அத்திபூத்தாற் போலவே கிடைக்கும். இதேதான் நடிகையின் விஷயத்திலும் நடந்தது. மீண்டும் டூயட் பாடவே அழைத்தனர் இயக்குநர்கள். அதற்கெல்லாம் மசியாத நடிகை எனக்கான கதையை கொண்டு வாருங்கள் என பிடிவாதமாக இருந்தார். அப்போது தான் உச்ச நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்புகள் இழப்பு

வாய்ப்புகள் இழப்பு

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்பதால் டூயட் பாட சம்மதித்தார். அதிலும் நடிகைக்கு பெரிதாக வேலையில்லை. சும்மா கண்களுக்கு குளிர்ச்சியாக வந்து சென்றார். ஒரே நேரத்தில் பல படங்களை கைவசம் வைத்திருந்த நடிகை, தனது தேவையில்லாத பிடிவாதத்தால் பல வாய்ப்புகளை இழந்து விட்டாராம்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

அதோடு நடிகைக்கான சம்பளமும் அதிகம் என்பதால் நடிகையை கமிட் செய்ய யோசிக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இந்நிலையில் தற்போது உள்ள காதலரும் திருமணத்திற்கு நெருக்கடி கொடுப்பதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் நடிகை. அதனால் அதற்குள் சம்பாதித்துவிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறாராம்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இதனால் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டக் கூட தயார் என பெரிய நிறுவனங்களுக்கு தூது விட ஆரம்பித்திருக்கிறாராம். உச்ச நடிகையின் இந்த அதிரடி முடிவுதான் தற்போது கோடம்பாக்கம் பகுதியில் ஒரே பேச்சாக உள்ளதாம். இதனைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், எப்படியோ தலைவியை நாமும் கண்டு ரசித்தால் சரி என மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனராம் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X