Just In
- 1 hr ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 1 hr ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 1 hr ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 2 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒதுக்கும் கோலிவுட்.. தீவிர மன உளைச்சல்.. பகலிலேயே குடித்துவிட்டு மட்டையாகிறாராம் பிரபல நடிகை!
சென்னை: கோலிவுட் சினிமா ஒதுக்குவதால் தீவிர மன உளைச்சலில் உள்ள அந்த நடிகை பகலிலேயும் குடிக்க தொடங்கி விட்டாராம்.
தமிழில் நடிகையாக அறிமுகமான காலத்திலேயே பாவாடை தாவணி போட்டு ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் அந்த நடிகை. மலையாள தேசத்தை பூர்வீகமாக கொண்ட அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை வாரி வழங்கியது கோலிவுட்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். வந்த வேகத்திலேயே அசுர வேகத்தில் வளர்ந்தார் நடிகை.

நடிப்பதில்லை
பின்னர் தன்னை வைத்து ஒரு சில படங்களை இயக்கிய இயக்குநருடன் காதல் கொண்டார். இயக்குநரும் நடிகையும் தீவிர காதலில் மூழ்க, வேறு வழியில்லாமல் திருமணம் முடித்து வைத்தது குடும்பம். திருமணத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்று மாமனார் குடும்பத்திற்கு உத்தரவாதம் அளித்து புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்தார் நடிகை.

நடிகரின் அரவணைப்பு
ஆனால் சொற்ப நாட்களுக்கு மட்டுமே தான் கொடுத்த வாக்குறுதியை பின்பற்றினார் நடிகை. பின்னர் மருமகன் நடிகரின் அரவணைப்புக்கு ஆளான அவர், மீண்டும் படங்களில் நடிக்கப் போவதாக கூறி குடும்பத்தில் பிரச்சனை செய்தார். திருமணத்திற்கு பிறகு நடிக்க தொடங்கியதால் திருமண வாழ்கை கசந்து கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்பட்டது.

படத்தால் வந்த வினை
இதனால் சட்டப்படி விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தனர் இயக்குநரும் நடிகையும். பின்னர் தனிக்காட்டு ராணியான நடிகை கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக அவர் நடித்த ஒரு படமே அவரது கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. அந்த ஒரு படத்தால் அத்தனை நாட்கள் சம்பாதித்த பெயர் புகழ் அனைத்தையும் இழந்தார்.

ஒதுக்கிய கோலிவுட்
அந்த படத்தால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் நடிகை. அந்த படத்தில் நடித்த ஒரே காரணத்தினால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் கோலிவுட்டில் இருந்தே ஒதுக்கப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் அந்த பிரபல நடிகை.

சோகத்தில் நடிகை
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் பரவின. காதலில் இருந்த நடிகைக்கு சீக்கிரமே இரண்டாவது கல்யாணம் செய்யும் முடிவில் இருந்தனர் குடும்பத்தினர். இந்நிலையில்தான் குடும்பத்தில் அந்த துக்க சம்பவமும் நடந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட அந்த இழப்பு நடிகையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

பகலிலும் குடி புலம்பல்
ஏற்கனவே குடி குடி என இருந்த நடிகையை இந்த துக்க சம்பவமும் ஆட்கொள்ள தற்போது பகலிலேயே குடிக்க தொடங்கிவிட்டாராம். எப்போதும் போதையில் இருக்கும் நடிகையின் நிலையை பார்த்த நெருங்கிய நட்பு வட்டாரம் ஆறுதல் கூறி தேற்றி வருகிறதாம். இருப்பினும் எல்லா விஷயத்திலும் அவசரப்பட்டுவிட்டேன் என புலம்பி வருகின்றாராம் நடிகை.