ஓஹோ அந்தளவுக்கு நெருங்கிட்டீங்களா.. நடிகையின் போட்டோவால் உடைந்த பிரபல நடிகரின் ரகசியம்!
புகைப்படம் ஒன்றால் புதிய கிசுகிசுவில் சிக்கியுள்ளார் உச்ச நடிகர் ஒருவர்.
Recommended Video
சென்னை: உச்ச நடிகரின் பேமிலி போட்டோவில் தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வரும் நடிகையும் இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
நடிகர், நடிகைகள் என்றாலே கிசுகிசுக்களில் சிக்குவது வாடிக்கை தான். அதிலும் பிரபலமாகி விட்டால் சொல்லவே வேண்டாம். அவர்கள் நிற்பது, நடப்பது, சாப்பிடுவது, தூங்குவது என எல்லாமே செய்தியாகி விடும். அதிலும் அவர்களது காதல், திருமணம் என பர்சனல் பக்கங்களைத் தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அலாதி பிரியம்.

இதனாலேயே யாராவது ஒரு நடிகரும், நடிகையும் சிரித்துப் பேசினால் கூட அவர்களுக்குள் தொடர்பிருக்கிறது என வதந்திகள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடும். சிரித்துப் பேசினாலே அப்படி என்றால் குடும்ப போட்டோவில் சேர்த்துக் கொண்டால் கேட்கவும் வேண்டுமா?
திருவள்ளுவர்க்கு காவி உடை போற்றியதை போல் எனக்கும் போற்ற பார்க்கிறார்கள்-ரஜினி
அப்படித்தான் புதிய கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார் உச்ச நடிகர் ஒருவர். ஏற்கனவே இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்த நடிகர் அவர். மூன்றாவதாக ஒரு நடிகையுடன் லிவிங் டுகெதராக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த நடிகை தனது தாயாருடன் அவரது குடும்ப புகைப்படத்தில் இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த நடிகை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகரின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். எனவே இதுவும் அவர்களைப் பற்றி பேச ஒரு காரணமாகி விட்டது.


Click it and Unblock the Notifications











