ரெண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாகும் பிரபல டிவி தொகுப்பாளினி.. நடிகருடன் ரொம்ப நெருக்கமாம்!
Recommended Video
சென்னை: பிரபா நிகழ்ச்சி தொப்பாளினி இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள ரெடியாவதாக கூறப்படுகிறது.
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வரும் அவர் பல படங்களிலும் நடித்து இருகிறார். பல ஆண்டுகளாக ஆங்கரிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு தமிழ் சினிமா முழுவதும் அத்துப்படி.
தமிழ் சினிமா மட்டுமின்றி இவருக்கு தெரியாத, இவரை தெரியாத சினிமாக்காரர்களே இல்லை என்று கூறலாம் அந்த அளவுக்கு பிரபலமானாவர். கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என பல மொழிகளிலும் பல பிரபலங்களை அறிந்தவர்.

நெருக்கம்
பிரபலங்களை நேர்க்காணல் செய்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு நெருக்காமானார். தான் நேர்க்காணல் செய்தவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகவே பழகி வருகிறார்.

திடீர் திருமணம்
இதனால் இளம் நடிகர்களுடன் இரவு பார்ட்டி, தண்ணி ஆட்டம் என வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி.

மது விருந்து
திருமணத்திற்கு பிறம் இரவு விருந்துகளை கைவிட முடியாமல் தொடர்ந்து வந்தார். இளம் நடிகர் நடிகைகள் ஒன்று சேரும் இரவு நேர மது விருந்து என்றால் சொல்லவா வேண்டும்? சக நண்பர்களுடன் அம்மணி அப்படி இப்படி என இருந்துள்ளார்.

விவாகரத்து
இந்த காட்சிகள் இணையத்தில் லீக்காக மாமியார் வீட்டில், இந்த பொண்ணு நம்ம குடும்பத்திற்கு ஒத்துவராது எனக்கூறி விவாகரத்து பெற முடிவு செய்தனர். அம்மணியும் இந்த உறவு இல்லாவிட்டால் கேள்விக் கேட்க ஆளில்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை வாழலாம் என்று எண்ணி பரஸ்பரம் மனம்ஒத்து விவாகரத்து பெற்றனர்.

பறக்கும் அம்மணி
விவாகரத்துக்கு பிறகும் இரவு நேர விருந்துகளை தொடர்ந்து வரும் தொகுப்பாளினி தற்போது பிரபல நடிகருடன் நெருங்கி பழகி வருகிறாராம். அம்மணியின் அழகில் மயங்கிப்போன அந்த நடிகரும் நெருக்கம் காட்டுகிறாராம்.

இரண்டாவது திருமணம்
நெருங்கிய நண்பராக இருந்த அந்த நடிகர் தொகுப்பாளினி விவாகரத்தாகி தனிமையில் தவிப்பதால் ஒருவருக்கொருவர் துணையாய் இருக்கப்போவதாக பேசப்பட்டு வருகிறதாம். இதனால் அம்மணி விரைவில் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











