இடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்
சென்னை: ரப்பர் பாடியுடன் சேரும் நடிகைகளின் மார்க்கெட் படுத்து தூங்கிவிடுகிறது.
வயதானாலும் ரப்பர் போன்று உடம்பை வைத்து அசத்துகிறார் அந்த நடிகர், இயக்குனர். அவர் நடனத்தை பார்த்து அசராதவர்களே இருக்க முடியாது. அந்த காரணத்தாலேயே நடிகைகள் அவரிடம் மயங்கிவிடுகிறார்கள்.
தற்போது ரப்பர் பாடியுடன் சேர்ந்துள்ளது வெடுக் வெடுக் இடுப்பழகி.

டான்ஸ்
வெடுக் வெடுக் இடுப்பழகிக்கு நடனம் உயிர் என்பதால் ரப்பர் பாடியை கடவுள் போன்று பார்க்கிறார். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் ரொம்பவே அதிகம். வயதை எல்லாம் மறந்து இருவரும் நெருக்கமாகியுள்ளது தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். இந்த ஆளுக்கு எங்கேயோ மச்சம் இருக்குய்யா என்று பெருமூச்சு விடுகிறார்கள் சிலர்.

காதல்
ரப்பர் பாடியுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்படும் முதல் நடிகை அல்ல வெடுக் வெடுக் இடுப்பழகி. இதற்கு முன்பு தங்கச்சி நடிகை, செவத்தப் புள்ள, உடம்பை குறைத்த நடிகை, வாரிசு நடிகை ஆகியோரின் பெயர்கள் ரப்பர் பாடியுடன் சேர்ந்து அடிபட்டுள்ளது. அதற்கும் முன்பு பெரிய நடிகை ஒருவர் ரப்பர் பாடி மீது காதலில் விழுந்து எழுந்து வந்தது தனிக் கதை.

படம்
ரப்பர் பாடியுடன் சேர்ந்து எந்த நடிகையின் பெயர் அடிபடுகிறதோ அவருக்கு மார்க்கெட் மரண அடி வாங்குகிறது. ரப்பர் பாடியுடன் சேர்ந்தால் நம் மார்க்கெட் பிக்கப்பாகி விடும் என்று எந்த நடிகையாவது நினைத்தால் அதை விட பெரிய முட்டாள்தனமே கிடையாது. வளர வேண்டிய புள்ளையான வெடுக் வெடுக் இடுப்பழகி கரெக்டா தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறார்.

ஹீரோக்கள்
கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் முன்னணி நடிகையாகியுள்ள வெடுக் வெடுக் இடுப்பழகியின் மீது இளம் ஹீரோக்கள் முதல் சீனியர் வரை பலரின் கண்கள் பட்டுள்ளது. இந்நிலையில் தேவையில்லாமல் ரப்பர் பாடியுடன் ஒட்டி உறவாடி அவரின் மார்க்கெட்டுக்கு அவரே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். எங்க படத்தை தட்டிப் பறித்தாளே அதனால் தான் அவளுக்கு ஆண்டவனா பார்த்து ஆப்பு வைத்துள்ளார் என்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள்.


Click it and Unblock the Notifications









