கண்டுக்காம இருக்கும் பிரபல நடிகர்: மனம் தளராமல் தொடர்ந்து தூதுவிடும் நடிகை
சென்னை: தங்கச்சி நடிகை முன்னணி ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஆசையில் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.
தங்கச்சி நடிகை அறிமுகமான படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அதிலும் குறிப்பாக அந்த படத்தில் வந்த ஒரு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.
முதல் படமே இப்படி என்றால் நடிகை நிச்சயம் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடிப்பு
நல்ல அழகும், நடிப்புத் திறமையும் இருந்தும் கூட தங்கச்சி நடிகையால் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக முடியவில்லை. தன் முதல் பட ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த ஹீரோ தற்போது வேற லெவலில் இருக்கிறார்.

கவர்ச்சி
படுத்து தூங்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த நடிகையும் ஏதேதோ செய்கிறார் ஒன்றும் கை கொடுக்கவில்லை. கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டும் கூட ஒர்க்அவுட் ஆகவில்லை. அவர் வாய்ப்பு கேட்டு தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று தெரிந்தும் கூட இயக்குநர்கள் கண்டுகொள்ளவில்லை.

தூது
தன் முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் தன்னுடன் நடித்து தற்போது பெரிய ஹீரோவாக உள்ள அந்த நடிகருக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம் நடிகை. ஆனால் நடிகரோ அவர் வாய்ப்பு கேட்டு தூதுவிடுவதை கண்டும் காணாமல் இருக்கிறாராம்.

படம்
நடிகர் கண்டுகொள்ளாவிட்டாலும் மனம் தளராமல் நடிகை தொடர்ந்து தூது விடுகிறாராம். பட வாய்ப்பை பெற்று ஒரு ரவுண்டு வராமல் ஓய்வது இல்லை என்று ஒரு முடிவோடு இருக்கிறாராம் நடிகை. உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மணி.


Click it and Unblock the Notifications











