சென்னை: லவ் பட நடிகை எங்கு சென்றாலும் அவரது காதலரும் உடன் வருகிறாராம்.
லவ் படம் மூலம் நடிகையானவர் அவர். தமிழில் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார் அந்த சேச்சி. சேச்சிக்கு காதல் வந்துவிட்டதாம். அவர் எங்கு சென்றாலும் காதலர் கூடவே வருகிறாராம்.
படத்தில் ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்காதே, செட்டில் யாருடனும் நெருங்கிப் பழகாதே என்று ஆயிரத்தெட்டு கன்டிஷன் போடுகிறாராம் காதலர். அவர் சொல்வதை கேட்டு நடிகை கடுப்பானாலும் இதுவும் பாசம் என்று சிரித்து சமாளிக்கிறாராம்.
காதலர் சொல்படி தான் நடக்க வேண்டி உள்ளதாம். இது டார்ச்சர் என்றாலும் காதலர் தன்னை பாதுகாக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்படுகிறாராம் நடிகை.
நடிகையை அவர் மாநிலத்தை சேர்ந்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்கிறார்கள். பார்க்க ஆம்பள மாதிரி இருப்பதாக கிண்டல் செய்து கடுப்பேற்றுகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.