நடிகரை காதலிக்கிறாராம், திருமணம் செய்ய மாட்டாராம்: நடிகையை பார்த்து வியக்கும் திரையுலகம்
Recommended Video

ஹைதராபாத்: இளம் நடிகை ஒருவரின் காதல் பற்றி தான் டோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
அண்டை மாநிலத்தை சேர்ந்த கூந்தல் அழகி நடிகை அவர். கோலிவுட் வந்தவர் அப்படியே டோலிவுட் பக்கமும் சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கவே தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

டோலிவுட் சென்ற இடத்தில் அக்கட தேசத்து நடிகர் ஒருவருடன் அம்மணிக்கு தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டது. நடிகை அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
காதலில் விழுந்த நடிகை அந்த நடிகரிடம் நான் உங்களை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளாராம். காதலிப்பாராம், ஆனால் திருமணம் செய்ய மாட்டாராம். இந்த நடிகையின் கேரக்டரையே புரிந்து கொள்ள முடியவில்லையே என்கிறார்கள் டோலிவுட்காரர்கள்.
இதற்கிடையே நடிகர் பெரிய இடத்து பெண் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக வேறு கூறப்படுகிறது. அட என்னவோ போங்கப்பா.


Click it and Unblock the Notifications











