ஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா?: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்
Recommended Video

சென்னை: இளம் நடிகை ஒருவர் ஓவராக பந்தா பண்ணுகிறாராம்.
அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தில் நடித்தவர் அந்த கல்லூரி மாணவி. தற்போது அவரது தாய் மொழியில் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலையில் தமிழ் இயக்குனர்கள் அவருக்கு போன் செய்து கதை சொல்ல நேரம் ஒதுக்குமாறு கேட்கிறார்களாம்.

அதற்கு அந்த நடிகையோ நான் ரொம்ப பிசி. நிறைய கதைகள் கேட்கிறேன். பின்னர் பார்க்கலாம் என்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை போன்று பேசி போனை வைத்துவிடுகிறாராம். தமிழ் படங்களில் நடிக்க கேட்டதற்கு படிக்கப் போகிறேன் என்றவர் அவரது தாய் மொழியில் நடிக்க மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஒரு படத்தில் நடித்ததற்கே இந்த பந்தாவா, எங்கே இந்த பொண்ணு பல படங்களில் நடித்துவிட்டால் கையில் பிடிக்க முடியாது என்கிறார்கள் இயக்குனர்கள்.


Click it and Unblock the Notifications











