என்னால் முடியாது, என்னை பார்த்தால் எப்படி தெரியுது?: நடிகை கோபம்
சென்னை: படத்தில் நடிக்க அழைத்தவரிடம் என்னை பார்த்தால் எப்படி தெரியுது என்று நடிகை ஒருவர் கேட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த அந்த மூன்று எழுத்து நடிகையின் மார்க்கெட் டல்லாக உள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் வெளியான ஒரு படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்தார்.
அந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் படம் பப்படமாகிவிட்டது. நடிகையின் நடிப்பையும் யாரும் பாராட்டவில்லை. இந்நிலையில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிச் சென்றுள்ளது.
நடிகை செம டென்ஷனாகிவிட்டாராம். ஏது வில்லனுக்கு ஜோடியாக நடித்தால் உடனே அக்காவா அதற்கு வேறு ஆளை பாருங்க என்று நடிகை தெரிவித்துவிட்டாராம்.
வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்பது இல்லை என்ற முடிவோடு இருக்கிறார் நடிகை.
Comments


Click it and Unblock the Notifications