»   »  நம்பி ஏமாந்து நிற்கும் இளம் நடிகை

நம்பி ஏமாந்து நிற்கும் இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகை ஒருவர் நம்பி ஏமாந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார் அந்த நடிகை. நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் வாய்ப்பை பெற போராடிக் கொண்டிருக்கிறார்.

சிறு, சிறு கதாபாத்திரங்களே அவரை தேடி வருகின்றன. தளபதி படத்தில் கூட ஒரு காட்சியில் வந்துவிட்டு போனாார். இதையடுத்து தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கி முன்னேறிவிடலாம் என்று நம்பினார். ஆனால் படத்திற்கு மட்டும் தான் நல்ல பெயர் கிடைத்தது. நடிகைக்கு வாய்ப்புகள் வரவில்லை.

அவரை தேடி ஹீரோயின் வாய்ப்புகள் வருவது இல்லையாம். கவுரவத் தோற்றத்தில் நடிக்க அழைக்கிறார்களாம். அந்த சீனியர் ஹீரோவின் படத்தை எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளார் நடிகை.

English summary
A young actress is disappointed as her bold decision has not yielded expected results. Directors are not ready to cast her as a leading lady.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X