ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போன வாரிசு நடிகை

By Siva

சென்னை: நடிகை ஒருவரின் ஆசை நிறைவேறாது போன்று.

வாரிசு நடிகைக்கு சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசை. அது முடியாது என்பது தெரிந்துள்ளதால் அவர் வாங்கும் சம்பளத்தை வாங்க ஆசைப்படுகிறார்.

சர்ச்சை நடிகைக்கு நிகரான சம்பளத்தை வாரிசு நடிகைக்கு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

வாரிசு நடிகை தான் வாரிசு நடிகருடன் சேர்ந்து நடித்த படம் வெளியான கையோடு சர்ச்சை நடிகை அளவுக்கு சம்பளத்தை உயர்த்த முடிவு செய்தார். படம் வெளியான பிறகு அவரின் நடிப்பு பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. மாறாக அந்த படத்தில் வந்த மற்றொரு நடிகையை தான் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

இந்த படத்தை சொல்லி வாரிசு நடிகை தயாரிப்பாளர்களிடம் ரூ. 5 அல்லது ரூ. 6 கோடி கேட்டால் நிச்சயம் யாரும் தர மாட்டார்கள். சிரிப்பை வைத்து படத்தை ஓட்டும் அவருக்கு அவ்வளவு பெரிய தொகை கிடைப்பது சாத்தியம் இல்லாமல் போயுள்ளது. சர்ச்சை நடிகை தற்போது ரூ. 5 முதல் ரூ. 6 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிச்சல்

எரிச்சல்

வாரிசு நடிகரின் படம் வெளியானால் தன்னுடன் நடித்த மற்றொரு நடிகை பெயர் வாங்கிவிடுவார் என்பது வாரிசு நடிகைக்கும் தெரியும். இருப்பினும் நம்மாலும் நடிப்பால் அசத்த முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார். பாவம் அவர் நம்பிக்கை வீணாகிவிட்டது. வாரிசு நடிகைக்கு அந்த நடிகை மீது கோபம் உள்ளதாம். இருந்தாலும் மறைத்துக் கொண்டு சிரித்து மழுப்புகிறார்.

முகம்

முகம்

வாரிசு நடிகை அங்கிள் வயதுள்ள நடிகர்களுக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார். அவர் தனது உடல் எடை மற்றும் முகத்தில் கவனம் செலுத்தாவிட்டால் விரைவில் ஆன்ட்டி பட்டியலில் சேர்ந்துவிடுவார். ஏற்கனவே தற்போது வெளியான படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலேயே அவரின் முகத்தில் வயதான தோற்றம் தெரிந்தது என்ற விமர்சனம் எழுந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X