»   »  தயாரிப்பாளர் கண்ணில் தக்காளி சட்னி வரவழைக்கும் துரையம்மா நடிகை

தயாரிப்பாளர் கண்ணில் தக்காளி சட்னி வரவழைக்கும் துரையம்மா நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துரையம்மா நடிகை வைக்கும் செலவை பார்த்து தயாரிப்பாளர்களுக்கு கண்ணீர் வருகிறதாம்.

துரையம்மா நடிகை கோலிவுட், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குனரின் இரண்டு படங்களில் நடித்துவிட்டார்.

அதுவும் உச்ச நடிகர் படத்தில் நடித்து பெரிய பெயர் எடுத்துவிட்டார். அம்மணி படப்பிடிப்பு நடக்கும்போதே திடீர் என்று தனது நாட்டிற்கு பறந்துவிடுவாராம்.

படப்பிடிப்பு முடிவதற்குள் பல முறை தமிழகத்தில் இருந்து தனது நாட்டிற்கு பறந்துவிடுவாராம். அவரது விமான செலவை தயாரிப்பாளர் தான் ஏற்க வேண்டுமாம். துரையம்மாவுக்கு மட்டும் ஆகும் செலவே பெரும் செலவாக உள்ளதாம்.

துரையம்மாவுக்காக தயாரிப்பாளர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்ய வேண்டியுள்ளதாம். இதனால் பெரிய தயாரிப்பாளர்களால் மட்டும் தான் துரையம்மாவுக்கு செலவு செய்ய முடியம் என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that a young actress is making her producers spend a lot for her personal travel from Tamil Nadu to her country.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil