மறுமணம் செய்து வைக்கத் துடிக்கும் பெற்றோர்: டிமிக்கி கொடுக்கும் நடிகை

By Siva

சென்னை: கணவரை பிரிந்த நடிகைக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்களாம் பெற்றோர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. அவர் வாழ்வில் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கு நடிகை தான் காரணம் என்று பேசப்பட்டது.

A young actress not interested in getting married again

விவாகரத்திற்கு பிறகு நடிகை உலகம் சுற்றும் பெண்ணாக மாறியுள்ளார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஊர் சுற்றுகிறார். படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் கூடுதல் கவர்ச்சி காட்டவும் அவர் தயங்குவது இல்லை.

அவர் நடித்து முடித்துள்ள ஒரு படத்தில் அவர் அணிந்த உடையை பார்த்து வியக்காதவர்களே இல்லை. எந்த கோலிவுட் நடிகையும் இந்த அளவுக்கு துணிந்தது இல்லை என்று பேசப்பட்டது. மேலும் அம்மணியின் பெயர் அவ்வப்போது வேறு மாதிரியும் அடிபட்டது.

இந்நிலையில் அவருக்கு மறுமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்களாம். நடிகையை ஒருவரின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் அவர் தன் சேட்டைகளை குறைத்துக் கொள்வார் என்பது அவர்களின் கணக்காம்.

சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கும் நடிகையோ திருமண பேச்சை எடுத்தாலே நைசாக நழுவி விடுகிறாராம். கல்யாணத்திற்கு இப்போ என்ன அவசரம், பின்னால் பார்க்கலாம் என்று சொல்கிறாராம்.

நடிகையிடம் பேசிப் பேசி ஓய்ந்த பெற்றோர் தற்போது உறவினர்களின் உதவியை நாடியுள்ளார்களாம். பெற்றோர் சொல்லியே கேட்காதவர் உறவினர்களின் பேச்சையும் காதில் வாங்குவது இல்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X