எப்படி இருந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?: பாவம்...

By Siva

சென்னை: மார்க்கெட் இல்லை என்பதை ரொம்ப அழகாக பேசி மழுப்பியுள்ளார் நடிகை ஒருவர்.

குண்டா அழகாக இருந்த நடிகை அவர். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக இருக்கிறார். அவரை கும்மென்று பார்த்த ரசிகர்களுக்கு தற்போது எலும்பும் தோலுமாக பார்க்க பிடிக்கவில்லை.

வெயிட்டை குறைத்த கையோடு அம்மணிக்கு மார்க்கெட்டும் போய்விட்டது.

மோசம்

மோசம்

முன்பெல்லாம் ஹீரோக்களே அம்மணியின் பெயரை பரிந்துரைப்பார்கள். தற்போது யாரும் கண்டுகொள்ளாததால் கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக இருந்து பட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் தற்போது கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மலையாளம்

மலையாளம்

கோலிவுட்டில் வாய்ப்பு இல்லாமல் போகவே அம்மணி பிற மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் அங்கும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இதையடுத்து போன வேகத்தில் கோலிவுட்டுக்கே திரும்பி வந்துவிட்டார்.

நடிகை

நடிகை

கோலிவுட்டுக்கு திரும்பி வந்தபோதிலும் அம்மணிக்கு முன்பு போன்று மவுசு இல்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறாராம். வாய்ப்பு இல்லை என்பதை மறைக்க பிரேக் எடுத்துக் கொண்டு நடிப்பதாக கதை அளந்துவிட்டுள்ளார். அந்த பிரேக் அவராக எடுத்தது இல்லை வாய்ப்பு இல்லாமல் எடுக்க வைக்கப்பட்டது.

பெருமை

பெருமை

தமிழ் படங்களால் தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. என்னை வாழ வைப்பது தமிழ் ரசிகர்கள். தமிழ் நடிகை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவள் நான். பிற மொழிகளை விட தமிழ் படங்களில் நடிக்கவே பிடிக்கும் என்று பயங்கரமாக பில்ட்அப்ஸ் கொடுத்துள்ளார். அப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார் பாவம். ஒரு காலத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருந்தவரின் நிலை இப்படி ஆகிவிட்டதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X