திறமை, பேக்கிரவுண்ட் இருந்தும் இந்த நடிகைக்கு ஏன் இந்த பொழப்பு?
சென்னை: திறமை, பேக்கிரவுண்ட் இருந்தும் வாரிசு நடிகை செய்யும் செயல் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
வாரிசு நடிகை ஒருவர் ஈகோ பார்க்காமல் நடிப்பதற்கு பெயர் போனவர். ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் கச்சிதமாக நடித்துக் கொடுப்பார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம் பிடிக்க மாட்டார்.
அவரின் இந்த அட்ஜஸ்ட் பண்ணுகிற குணம் தான் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது.

இயக்குனர்
வாரிசு நடிகை தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். டப்பிங்கும் பேசி முடித்துவிட்டார். பாரபட்சமே இல்லாமல் அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஐஸ் இல்லை இல்லை ஐஸ் பார்களையே வைக்கிறார். உங்களை மாதிரி ஸ்வீட்டா, க்யூட்டா யாருமே இல்லை பாஸ் என்று அநியாயத்திற்கு ஐஸ் வைக்கிறார்.

பயம்
இவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களின் ஹீரோயினுக்கு இவரை பார்த்து பயம். காரணம் இவர் நடிப்பில் அசத்திவிட்டு சென்றுவிடுவார், நாம் சிரித்து சிரித்து ஓட்ட வேண்டும் என்ற பயமாம். இப்படி ஹீரோயினையே பயப்பட வைக்கும் அளவுக்கு திறமையை வைத்துக் கொண்டு இந்த பொண்ணு அனைவருக்கும் ஐஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஐஸ் பார்
இயக்குனர்களோடு நிறுத்திக் கொள்வது இல்லை இளம் ஹீரோக்கள் முதல் சீனியர் வரை அனைவரையும் புகழ்ந்து தள்ளிவிடுகிறார். பல படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்தாலும் ஐஸ் வைப்பதற்கு என்றே நேரம் ஒதுக்குவார் போன்று. அவரின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கம் போனால் பிரபலங்களை புகழ்ந்து போட்ட பதிவுகளாகத் தான் உள்ளது.

காதலர்
தந்தை, காதல் ஆகியோர் திரைத்துறையில் பெரிய ஆட்களாக இருந்தும் அம்மணிக்கு ஏன் இந்த ஐஸ் வைக்கும் வேலை என்ற கேள்வி எழுந்துள்ளது. திறமை மட்டும் இருந்தால் போதுமா, பிரபலங்கள் மத்தியில் நல்ல பெயரும் எடுக்க வேண்டும் அல்லவா?. அதற்காகத் தான் அம்மணி இப்படி ஐஸ் வைப்பதை ஒரு வேலையாகவே வைத்துள்ளாராம். திறமை இருந்தும் பிரபலங்களை பகைத்துக் கொண்டதால் முன்னேற முடியாமல் ஒரு இளம் நடிகை தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










