படுத்து தூங்கிய மார்க்கெட்: ஒரேயடியாக இறங்கி வந்த நடிகை
சென்னை: செவத்த புள்ள நடிகை தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.
கோலிவுட், டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த செவத்த புள்ள நடிகைக்கு தற்போது மார்க்கெட் படுத்துவிட்டது. அவர் பெரிதும் எதிர்பார்த்த படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அவரை தான் யாருமே கண்டுகொள்ளவில்லை.
மார்க்கெட் இல்லாததை புரிந்து கொண்ட நடிகை கோடிகளில் வாங்கிய சம்பளத்தை குறைத்தார். சம்பளம் குறைத்த செய்தியை பரப்பியும் யாரும் அவரை நடிக்க அழைக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை மேலும் குறைத்துள்ளார். அப்படியாவது பட வாய்ப்புகள் வராதா என்று தான். அவர் நினைத்தது வீண் போகவில்லை. வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது.
நடிகை சம்பள்ததை குறைத்துள்ளது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications