அவள் நடிக்கிற படத்தில் நான் நடிக்க மாட்டேன்: நடிகை அடம்
சென்னை: மோக்கியாவின் முதலாளி நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து செல்ல புஸு புஸு நடிகை மறுத்துவிட்டாராம்.
விரல் நடிகருடன் காதல் முறிந்த புஸு புஸு நடிகை பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மோக்கியாவின் முதலாளி நடிகர் தான் நடித்து வரும் தோழர்கள் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்குமாறு புஸு புஸு நடிகையிடம் கேட்டுள்ளார். மோக்கியா முதலாளி ஹீரோ அவதாரம் எடுத்த முதல் படத்தின் நாயகி என்ற பாசத்தில் கேட்டுள்ளார்.
அதற்கு நடிகையோ உங்களின் எத்தனை படத்தில் வேண்டுமானாலும் கெஸ்ட் ரோலில் பணமே வாங்காமல் நடிக்கிறேன். ஆனால் அவ(நயனம்) நடிக்கிற படத்தில் என்னை கெஸ்ட் ரோலில் வரச் சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டாராம். படத்தில் விரல் நடிகரின் முன்னாள் காதலியான நயன நடிகை தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நடிகர் உலக நாயகனின் மகளிடம் கேட்க அவரோ வழக்கம் போல நான் பிசி என்று கூறிவிட்டாராம். இதையடுத்து அந்த ரோலில் லட்சுமிகரமான நடிகை நடிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











