»   »  பெயரை கெடுக்குதே: அழகி நடிகை மீது கடுப்பில் இயக்குனர்

பெயரை கெடுக்குதே: அழகி நடிகை மீது கடுப்பில் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய ஹீரோவுடன் நடிக்க வைத்துள்ளேன் இந்த பொண்ணு இப்படி ஆபாச புகைப்படங்களை வெளியிடுகிறதே என வெளிநாட்டு அழகி நடிகை மீது பிரமாண்ட இயக்குனர் கோபத்தில் உள்ளாராம்.

பிரமாண்ட இயக்குனர் ஸ்டைல் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தில் வெளிநாட்டு அழகி நடிக்கிறார். பாலிவுட்டிலும் பிசியாக இருக்கும் அந்த நடிகை நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை ஆடையில் வந்து போஸ் கொடுக்கிறார்.

மேலும் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்பது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார். இதை எல்லாம் பார்த்து பிரமாண்ட இயக்குனருக்கு தான் டென்ஷன் ஏறுகிறதாம்.

நான் எவ்வளவு பெரிய ஹீரோவுடன் நடிக்க வைத்துள்ளேன். இந்த பொண்ணு இப்படி கண்டமேனிக்கு இருக்கிறதே என்று கவலையில் உள்ளாராம். இந்த பொண்ணு படத்தோட பெயரை கெடுத்துவிடுவோமோ என்று இயக்குனருக்கு கவலையாம்.

நடிகை அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதாக இல்லை. அவர் பாட்டுக்கு ஜாலியாக ஊர் சுற்றி, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

English summary
A young actress's actions have reportedly upset a popular director of Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil