இது உனக்கு தேவையா: தன்னை தானே திட்டி நொந்து நூடுல்ஸான வாரிசு நடிகை
சென்னை: பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முடியாமல் திணறும் வாரிசு நடிகையை பார்த்து படக்குழுவே சிரிக்கிறதாம்.
பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வாரிசு நடிகை நடித்து வருகிறார். அந்த பிரபல நடிகையோ நவரச நாயகி. நடிகர் திலகத்தையே நடிப்பால் மிரட்டியவர். இதை நடிகர் திலகமே ஒருமுறை கூறியுள்ளார்.

அப்பேர்பட்ட நடிகை போன்று நடிக்க முடியாமல் வாரிசு நடிகை திணறி வருகிறாராம். சில காட்சிகளுக்கு எத்தனை டேக் வாங்கினாலும் முடியவில்லையாம்.
ஏன்டா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டோம் என்று வாரிசு நடிகை நொந்து கொண்டிருக்கிறாராம். அவர் நடிப்பு வராமல் கஷ்டப்படுவதை பார்த்து படக்குழுவினரே சிரிக்கிறார்களாம்.
இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானபோதே இந்த கதாபாத்திரத்திற்கு வாரிசு நடிகை சுத்தமாக ஒத்து வர மாட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











