ஏம்மா என்ன பிரச்சனை, இப்ப ஏன் அழுகுறீங்க?: நடிகையிடம் கேட்ட ரசிகர்கள்
Recommended Video

சென்னை: நடிகை ஒருவர் தன்னை யாரும் கண்டுகொள்ளாததால் அழுவது போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ச்சே,ச்சே நான் எல்லாம் சமூக வலைதளம் பக்கம் அடிக்கடி செல்லும் ஆளே இல்லை என்று இளம் நடிகை ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியதற்கு நேர் எதிராக சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஹீரோ
அந்த நடிகை தான் நடித்த ஒரு படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி அவருக்கு கை கொடுக்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ஹீரோவை தான் பாராட்டுகிறார்கள்.

அதிருப்தி
படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தன்னை பற்றியே பேசுவார்கள் என்று எதிர்பார்த்த நடிகை ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்துவிட்டார்.

புகைப்படம்
அழுவது போன்று செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் நடிகை. உடனே ஆளாளுக்கு என்னாச்சு, ஏன் இந்த சோகம் அழுகை ஏன்று அவரிடம் கேட்கத் துவங்கிவிட்டனர்.

பேச்சு
நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அது குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியும் கூட பப்ளிசிட்டி தேடுகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications









