»   »  சிங்கம்னாலும் சரி, ஒல்லினாலும் சரி: இது நடிகையின் பலே கணக்கு

சிங்கம்னாலும் சரி, ஒல்லினாலும் சரி: இது நடிகையின் பலே கணக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்கெட்டே இல்லாத நடிகைக்கு சிங்கம் மற்றும் ஒல்லி நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த தங்கச்சி நடிகை கோலிவுட்டில் பெரிய இடத்தை பிடித்துவிடலாம் என்று நம்பினார். ஆனால் அவர் வளர்ந்து வந்த நேரத்தில் மற்றொரு நடிகை வந்ததால் அவரின் மார்க்கெட் அடிவாங்கிவிட்டது.

தற்போது நடிகைக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. அவரும் கவர்ச்சி காட்ட கூட தயார் என்று கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அம்மணி தனக்கு சிங்கம், ஒல்லி மீது ஒரு கண் என்று தெரிவித்துள்ளாராம்.

அதாவது சிங்கம் கூடவும், ஒல்லி நடிகர் கூடவும் நடிக்க ஆசையாக உள்ளதாம். இதில் யாராவது ஒருவருடன் ஜோடி சேர்ந்துவிட்டால் கூட தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று நம்புகிறார் அம்மணி.

இதுக்கு சிங்கமும், ஒல்லியும் ஒத்துக் கொள்ள வேண்டுமே. நடிகையுடன் ஏற்கனவே சேர்ந்து நடித்த அந்த இளம் ஹீரோ கூட அவருடன் மீண்டும் ஜோடி சேர விரும்பவில்லையாம்.

English summary
A young actress wants to share screen space with Singam and Olli actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil