'ஐட்டம்' ஆகத் துடிக்கும் நடிகை: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
சென்னை: நடிகை ஒருவர் ஐட்டம் டான்ஸர் ஆகியதை பார்த்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இளம் நடிகை அவர். அவரின் கெரியர் மோசமாக இருந்தபோது அவர் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.
நடிகையோ தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

படம்
நடிகை பட வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு நடித்து பெரிய ஆளாக ஆவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் வாழ்க்கையை செமயாக என்ஜாய் செய்யவே விரும்புகிறார். இதை பார்த்த இயக்குனர்கள் இந்த பொண்ணு சரிப்பட்டு வராது என்று வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்ய சென்றுவிட்டனர்.

குத்தாட்டம்
நடிகைக்கு கெரியர் மீது அல்ல மாறாக என்ஜாய் செய்வதில் தான் முழுக் கவனமும் உள்ளது. இதை புரிந்து கொண்ட திரையுலகினர் நீ என்ஜாய் பண்ணுமா என்று அவரை விட்டுவிட்டார்கள். ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காத அவர் குத்தாட்டம் போட அழைத்தால் ஆனந்தமாக வந்து ஆடிவிட்டு போகிறார்.

நடிகை
நடிகையை ஹீரோயினாக்கிப் பார்க்க நினைத்தவர்கள் எல்லாம் தற்போது அவரை ஐட்டம் டான்ஸராக தான் பார்க்கிறார்கள். இத்தனை நடக்கின்ற போதிலும் நடிகை்கு அது எல்லாம் பெரிதாக தெரியவில்லை. அவர் அண்மையில் செய்த ஒரு காரியத்தால் அவரின் பெயர் கெட்டுவிட்டது.

திருமணம்
நடிகையின் கெரியர் தான் இப்படி என்றால் காதல் வாழ்க்கையும் சரியில்லை. அவர் பெரிய இடத்தில் திருமணம் செய்து செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் கை கூடவில்லை. நடிகை எந்த நினைப்பில் இப்படி எல்லாம் செய்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











