அந்த 2 பேரையும் காலி பண்ணி காட்டுகிறேன் பார்: இடுப்பழகி நடிகை சபதம்
சென்னை: சர்ச்சை நடிகை உள்ளிட்ட 2 முன்னணி நடிகைகளை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சபதம் எடுத்துள்ளாராம் வெடுக் வெடுக் இடுப்பழகி நடிகை.
நடனம் என்ற ஒரு விஷயத்தை தனது பலமாக வைத்துள்ள அந்த வாரிசு நடிகை மும்பையில் இருந்து சென்னை வந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் படம் ஓடாவிட்டாலும் அவர் வெடுக் வெடுக் என்று இடுப்பை ஆட்டி ஆடிய அழகை பார்த்து பல ஹீரோக்கள் அவரை இயக்குனர்களிடம் பரிந்துரை செய்கிறார்கள்.

இளம் ஹீரோக்கள்
சீனியர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் நடிகையின் நடனத்தை பார்த்து அசந்துவிட்டனர். அதனால் அவரின் காட்டில் வாய்ப்பு மழை ஜோராக பெய்கிறது. வந்த வேகத்தில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவருக்கு மளமளவென பட வாய்ப்புகள் வந்து குவிவதை பார்த்து பிற நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.

சபதம்
நடனத்தை வைத்து ரசிகர்களை கவர்ந்து வரும் அம்மணி சர்ச்சை நடிகை உள்ளிட்ட 2 முன்னணி நடிகைகளை விரட்டிவிடுவேன் என்று சபதம் போட்டுள்ளாராம். சர்ச்சை நடிகை உங்கள் அளவுக்கு ஆடாவிட்டாலும் தனது நடிப்பாலேயே படத்தை ஹிட்டாக்கி விடுவார். ஹீரோ அளவுக்கு அவருக்கு கவுரவம் இருக்கிறது. இது புரியாமல் இந்த சின்னப்புள்ள குதிக்குது.

நடிகை
இப்படித் தான் சர்ச்சை நடிகையை காலி செய்கிறேன் என்று வீராப்பு பேசிய வாரிசு நடிகை ஒருவர் காமெடி பீஸாகிப் போனது தான் மிச்சம். இந்நிலையில் இந்த நடிகை வேறு. அடுத்த நடிகைகளின் பட வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் வெடுக் வெடுக் இடுப்பழகியின் சபதத்தை கேட்டால் கோடம்பாக்கத்தினர் சிரிக்கத் தான் செய்கிறார்கள்.

நடிகர்
வெடுக் வெடுக் இடுப்பழகி நடிகை கிட்டத்தட்ட அப்பா வயது நடிகர் ஒருவருடன் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த நடிகருடன் நெருக்கம் காட்டிய நடிகைகளின் மார்க்கெட் தான் காலியாகியுள்ளது. இது புரியாமல் அம்மணி சவுண்டு விடுகிறார். உங்களை விட ஒரு மடங்கு மேலே சென்று பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்த ஒருவர் தற்போது வாய்ப்பு இல்லாமல் அல்லாடுகிறார்.


Click it and Unblock the Notifications










