பிகினியால் இந்த நடிகையின் காதல் முறியவில்லையாம்!
சென்னை: பெயரில் சித்து விளையாட்டை வைத்திருக்கும் நடிகரும், சமத்து நடிகையும் பிரியவில்லையாம். இன்னும் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறார்களாம்.
பெயரில் சித்து விளையாட்டை வைத்திருக்கும் நடிகரும், சமத்து நடிகையும் காதலிக்கிறார்கள் என்று மீடியாக்கள் வாய் வலிக்க கூவியதுடன், கை வலிக்க எழுதியும் ஆகிவிட்டது. அவர்கள் விழாக்களுக்கு ஜோடியாக வருவது, ட்விட்டரில் பாச மழை பொழிவது, கோவிலுக்கு ஜோடியாக சென்று பூஜை செய்வது என்று இருந்தாலும் நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டால் மட்டும் ம்ம்ம்ம வாயே திறப்பது இல்லை.
அவர்கள் இப்படி கண்ணாமூச்சி ஆடுவதால் தான் மீடியாக்களும் அவர்களை பற்றிய காதல் செய்திகளை வதந்தியாகவே எழுதுகின்றன. இந்நிலையில் நடிகை அண்மையில் வெளியான படத்தில் டூ பீசில் வந்து படுகவர்ச்சி காட்டியதால் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் காதல் ஜோடி கலந்து கொண்டது. மேடையில் பேசிய நடிகர் காதல் முறியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்தார். அவர்கள் இருவரும் காதலை ஒப்புக் கொண்டால் யாரும் அவர்களை மீண்டும் கண்டுகொள்ளப் போவது இல்லை. இதை விட்டுவிட்டு அனைவருக்கும் டிமிக்கி கொடுப்பதிலேயே இந்த ஜோடி குறியாக உள்ளது.
கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications










